Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`படத்துக்கு ஒரு நியாயம்; களத்துக்கு ஒரு நியாயமா?' - ரஜினியை விமர்சித்த தமிமுன்அன்சாரி..!

சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினி, கருத்து தெரிவித்திருந்தார்.

தமிமுன் அன்சாரி

அதைத் தொடர்ந்து ரஜினியை  தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார். இது குறித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அளித்த பேட்டியில்,  ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் பிரதமர் நரேந்திரமோடி ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்திருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், பிரதமரைச் சந்திக்க வலியுறுத்தினோம். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தைக் கர்நாடக அரசு வஞ்சிப்பதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. 

காவிரி உரிமை மீட்பு குழு, தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆகியவை சார்பில் சென்னைக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளோம். இதில் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர். ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து அறவழியில் நாங்கள் நேற்று அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம். போராட்டத்துக்கு நாங்கள் ஆயுதங்களை கொண்டு செல்லவில்லை.  

இந்தப் போராட்டத்தை நடிகர் ரஜினி, வன்முறை என்று விமர்சித்துள்ளதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை என்று சித்தரித்திருப்பதை பார்க்கும்போது ரஜினியின் செயல்பாடு கர்நாடகாவின் ஆதரவு போக்கைக் வெளிக்காட்டுகிறது. திருச்சியில் காவல் அதிகாரியால் உயிரிழந்த கர்ப்பிணி உஷா விவகாரத்தில் காவல் துறை வன்முறையில் ஈடுபடவில்லையா?.  ரஜினியின் ட்விட்டர் கருத்து பி.ஜே.பி-க்கு சாதகமாகவே இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. தளபதி படத்தில் போலீஸை அடிக்கும் காட்சியில் நடித்தவர்தான் நடிகர் ரஜினி. படத்துக்கு ஒரு நியாயம்; களத்துக்கு ஒரு நியாயமா?..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement