Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`பாரதிராஜாவுக்கு ஒரு நேரம்; சீமானுக்கு ஒரு நேரம்' - காலதாமதப்படுத்திய போலீஸ்..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமீர் உள்ளிட்டோரைக் காவல்துறை விடுவித்துள்ளது. 

சீமான்

காவிரி மேலாண்மை வாரியத்தைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமைக்கத்தால், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் தீவிரமாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டுவது என எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காலைச் சென்னை விமான நிலையம் வந்த அவருக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மோடி வருகைக்கு எதிர்ப்பு சென்னை விமான நிலையத்தில்  சீமான், பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கறுப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்களைக் கைது செய்த  போலீஸ், பாரதிராஜாவை சிட்லபாக்கத்தில் உள்ள மண்டபத்திலும், சீமான், அமீர் உள்ளிட்டோரை பல்லாவரத்திலும் சிறை வைத்தனர். வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் கைது செய்யப்படுவார்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவதைப் போல், பாரதிராஜாவை காவல்துறை விடுதலை செய்தது. ஆனால் சீமான் உள்ளிட்டோரை விடுதலை செய்யவில்லை. இதைக் கேள்விப்பட்ட பாரதிராஜா அவர்களை விடுதலை செய்யும்வரை வெளியேறப்போவதில்லை எனக் கூறி மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். 

இதற்கிடையே, நேற்றுமுன்தினம் நடந்த போராட்டத்தின் போது, போலீஸார் தாக்கப்பட்டது தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டதால் அவர் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியது. மேலும் வழக்கத்திற்கு மாறாக சீமான் அடைக்கப்பட்ட மண்டபத்தை சுற்றிலும் அதிரடி படைகள் குவிக்கப்பட்டன. இதனால் அவர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. இந்நிலையில், ``எவ்வித போராட்டங்களையும் அறிவிப்பிற்கு முன் முன்னெடுக்க வேண்டாம். தலைமையிலிருந்து அறிவிப்பு  வெளியாகும் வரை பொறுமை காக்கவும். சட்டப்படி எதையும் எதிர்கொள்வோம்" எனத் தொண்டர்களுக்கு சீமான் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் சீமான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement