Published:Updated:

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!
பிரீமியம் ஸ்டோரி
கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

Published:Updated:
கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!
பிரீமியம் ஸ்டோரி
கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!
கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

னித உறவுகளின் மாண்புகளைச் சிதைக்கிற, கொச்சைப்படுத்துகிற வகையில் மகள், சகோதரி, தாய் என சொந்த உறவுகளையே வக்கிரத்துடன் அணுகி, தன் இச்சையைத் தணித்துக் கொண்டு, அவர்களைத் தீர்த்துக்கட்டும் கொடுமைகள் நம் சமூகத்தில் அரங்கேறி வருகின்றன.   

ஸ்வீட் ஸ்டாலில் மாஸ்டராகப் பணியாற்றியவர் சின்னராஜ். இவரது இரண்டாவது மனைவி பாண்டியம்மாள். முதல் கணவருக்குப் பிறந்தவர்கள் பவித்ரா, பரிமளா, ஸ்நேகா. இந்த மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தந்தை என்ற ஸ்தானத்தில் சின்னராஜ் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, அந்த மூன்று பேரையும் காமக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறார். மூத்த மகளான பவித்ராவை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு பாண்டியம்மாளுக்கு டார்ச்சர் கொடுத்துள்ளார். அதற்கு, பாண்டியம்மாள் மறுப்புத் தெரிவிக்கவே நான்கு பேரையும் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். கொலையைவிடக் கொடூரம் அதற்குப்பிறகுதான் நிகழ்ந்தது... அந்த நான்கு பேரின் சடலங்களோடு உடலுறவு கொண்டுள்ளார், அந்தக் காமக்கொடூரன்.

காமத்துக்காகத் தன் ரத்தச் சொந்தங்களைக் கொலை செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன என்பது வேதனையான யதார்த்தம்.

சித்தி மகளைக் கர்ப்பமாக்கி...

சேலம் அருகே ஒரு கிராமத்தில், செல்வம் என்பவர் தன் சொந்த சித்தியின் மகளை வல்லுறவு கொண்டிருக்கிறார். அதனால், செல்வத்துக்கு சகோதரி முறையான அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துவிட்டார். அதைத் தன் அம்மாவிடம் சொல்லி அழுத பிறகு, அந்தக் கருவை கலைத்து உள்ளனர். ஆனாலும், மீண்டும் அந்தப் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்துள்ளார் செல்வம். அதனால் சண்டை போட்டு செல்வத்துடனான உறவையே அந்தக் குடும்பம் துண்டித்துவிட்டது. இந்த நிலையில், அந்தப் பெண் வேறொரு பையனுடன் நட்பாகப் பழகியிருக்கிறார். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த செல்வம், அந்தப் பெண் மீது ஆசிட் வீசியிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

மதுபோதையில் சகோதரியை...

செல்வம் தன் சித்தி மகளை நாசமாக்கினார் என்றால், கோவை ரத்தினபுரி நகரைச் சேர்ந்த ரவி என்பவர், தன் சொந்த சகோதரியையே சிதைத்துவிட்டார். மது போதையில் வீட்டுக்கு வந்த ரவி, தன் சொந்த சகோதரியை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டுள்ளார். அந்தத் தவறு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் சகோதரியைக் கொலை செய்துவிட்டார். மது போதை தெளிந்தவுடன், ‘நான் பெரிய தவறு செய்துவிட்டேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவரும் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கடிதத்தில், “அன்புள்ள அம்மாவுக்கு நான் உங்களை விட்டுப் பிரிய நேரம் வந்துருச்சு. நான் போறேன்னு கவலைப்படாதீங்க. நான் இன்னொரு ஜென்மம் எடுத்து வருவேன். அந்த ஜென்மத்திலாவது உங்கள் பெயர் கெடுக்காத உயிராக வருவேன்” என்று எழுதி இருந்தார்.

ராணுவ வீரரின் வெறிச்செயல்!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே அம்பலக்கடையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரூஸ்வெல்ட். இவருக்கு 2014-ல் நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ரூஸ்வெல்ட் புரிந்த குற்றம் என்ன தெரியுமா? தன் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கொலையும் செய்ததுதான். ரூஸ்வெல்ட்டின் மனைவி உடல் ஆரோக்கியம் இல்லாமல் உயிரிழந்தார். இவர்களின் ஒரே மகள் ஷிர்லி ஜாஸ்மின், தன் அத்தை வீட்டில் வசித்துவந்தார். ரூஸ்வெல்ட் ராணுவத்தில் ஓய்வுபெற்று ஊருக்குத் திரும்பினார். ஜடா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். அத்தை வீட்டில் இருந்த ஜாஸ்மினை தன் வீட்டுக்கு அழைத்துவந்தார். 2010 மே, 29 அன்று குளியலறையில் ஜாஸ்மின் இறந்துகிடந்தார். அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போயிருந்ததால், திருட்டுக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், ஜாஸ்மின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. டி.என்.ஏ சோதனையில் அந்தக் கர்ப்பத்துக்குக் காரணம் தந்தையான ரூஸ்வெல்ட் என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், தன் மகளைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதையும், கர்ப்பமான விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.

கொலைகளில் முடியும் குடும்ப செக்ஸ் வன்முறை!

அரிதானது என்றபோதிலும், குடும்ப செக்ஸ் டார்ச்சர்களும், அதைத் தொடர்ந்து கொலைகளும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குடும்ப மானம் கருதியும், யாரிடம் சொல்வது என்று தெரியாமலும் பல பெண்கள் தவிக்கிறார்கள்.

கசப்பான உண்மைகள்!

இதுகுறித்து ‘டிடெக்டிவ்’ வரதராஜனிடம் பேசினோம். “குடும்ப செக்ஸ் வன்முறை தமிழகத்தில் இருக்கு. இந்த மாதிரி கேஸ் என்கிட்ட வருது. குடும்ப செக்ஸ் வன்முறையால பெண்கள் கொலை செய்யப்படுறதும் நடக்கிறது. சில வருஷத்துக்கு முன்னால ஒரு பெண் தற்கொலை செஞ்சுகிட்டாங்க. ‘நல்லாத்தான் இருந்தா... திடீர்னு இப்படிப் பண்ணிக்கிட்டா’னு சொல்லி அந்தப் பெண்ணோட பெற்றோர் என்கிட்ட அழுதாங்க. நீண்ட முயற்சிக்கு அப்புறம், அந்தப் பெண்ணோட தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சோம். அந்தப் பெண்ணுக்கு ஒரு சகோதரன் இருக்கான். சின்ன வயசுல இருந்தே அண்ணனும், தங்கச்சியும் ஒரே ரூம்ல தூங்கியிருக்காங்க. அவங்க அப்பாவும், அம்மாவும் வேற ரூம்லயும் தூங்கியிருக்காங்க. அந்தப் பொண்ணோட அண்ணன், தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருக்கான். இதைப் பெற்றோரிடம் சொல்றதுக்கு அந்தப் பெண் பயந்துருக்கா. அதை, அண்ணன் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டான். அந்தப் பொண்ணு கர்ப்பமாயிடுச்சு. அதுதான் தற்கொலைக்குக் காரணம்.

இதுபோல இன்னொரு கேஸ். ஒரு பெண் என்கிட்ட வந்தாங்க. ‘என் கணவருக்கும், அவரோட அம்மாவுக்கும் கள்ளத்தொடர்பு இருக்குனு சந்தேகப்படுறேன். இதை நீங்கதான் கண்டுபுடிச்சுத் தரணும்னு சொல்லி அழுதாங்க. அந்த மாதிரி இருக்காதுன்னு நான் நெனைச்சேன். அதனால, ‘இப்படி எல்லாம் பேசாதம்மா. அப்படி எதுவும் இருக்காது’ன்னு சொன்னேன். சரி, சந்தேகத்தை நிவர்த்தி செய்திடலாமேன்னு, ‘நீ ஒரு வாரம் உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வா’ன்னு அந்தப் பொண்ணுக்கிட்ட சொன்னேன். நாங்க புலனாய்வு செஞ்சதுல, அந்தப் பொண்ணு சந்தேகப்பட்டது உண்மைதான்னு கண்டுபிடிச்சோம்.

உறவுகளின் புனிதத்தை அறியாத காமக்கொடூரர்களும் நம் சமூகத்துல வாழ்றாங்க என்பது கசப்பான உண்மைதான்” என்றார்.

‘‘தவறான புரிதல்தான் காரணம்!”

இந்தப் பிரச்னை குறித்து மனநல மருத்துவர் டாக்டர் டி.வி.அசோகனிடம் பேசினோம். “காமத்தைப் பற்றிய தவறான புரிதல் அல்லது காம சுகம் வேண்டும் எனப் பல நாள் நினைத்து நினைத்து ஒருவித மனநோய்க்கு ஆளாவது என்பதுதான் இங்கு, முறைதவறிய குடும்ப செக்ஸ் நடக்குறதுக்கு முக்கியக் காரணம். உறவுமுறை பற்றியோ, ரத்தச் சொந்தம் பற்றியோ யோசிக்க அத்தகைய மனம் தயாராக இல்லை. வாய்ப்பு வரும்போது அவர்கள் தங்களின் காமப் பசியைத் தீர்த்துக்குறாங்க. இப்போ, இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தறவங்க அதிகமா இருக்காங்க. இணையத்துல, தப்பான குடும்பக் கதைகள், தப்பான குடும்பப் படங்கள் கொட்டிக்கிடக்குது. இணையத்துக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாததால, தவறான விஷயங்கள் அதுல நிறைஞ்சிருக்கு. இதனால கவரப்பட்ட ஆணோ, பெண்ணோ இதுலதான் அதிகமான இன்பம் இருக்கும்னு காமத்துக்கு அடிமையாகுறாங்க. அதனால நாளடைவில் குடும்ப உறுப்பினர்கள் மீதே தவறான எண்ணம் உருவாகுது.

போதைப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம். ஒருவர், மது அல்லது பிற போதை வஸ்துகளுக்கு அடிமையாக இருக்குறப்போ, காம உணர்வு ஏற்பட்டால் அதை எப்படியாவது தீர்த்துக் கொள்ளனும்னு நினைப்பாங்க. அப்படித்தான், தன் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையையே சிதைக்கிறாங்க. இதுல, பாதிப்புக்கு உள்ளாகும் நபர் சம்மதம் தெரிவிக்கலைன்னா கொலை செய்யவும் துணிஞ்சிடுறாங்க. அவர்களில் சிலர், போதை தெளிஞ்ச பிறகு, தான் செஞ்ச தவறுக்காக வருந்தவும் செய்றாங்க. சினிமா, டி.வி., பத்திரிகைகள், இன்டர்நெட் என எங்கு பார்த்தாலும் ஆண், பெண் கள்ள உறவுகள் அதிகமாகக் காட்டப்படுது. டேட்டிங், சாட்டிங் வசதிகள் இன்டர்நெட் மூலமாக சர்வசாதாரணமாக நடக்குது. நாளெல்லாம் அதையே படிக்கிறதால, பார்க்குறதால கண்ணும், மூளையும் சிந்திக்க மறந்து எப்படியாவது செக்ஸ் உறவு வச்சுக்க ஏங்குது. இதனால, உறவு முறைகள் இரண்டாம் பட்சமாகிவிடுது. பெற்றோர்களோடச் சரியான கண்டிப்பும், குழந்தைகள் மீது கண்காணிப்பும், நல்ல வளர்ப்பு முறையும் இருந்தால், குழந்தைகள் நல்வழியில் வளருவாங்க” என்றார்.

‘‘கலாசார சீர்கேடு இது!”

இதுபற்றி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கண்ணப்பனிடம் பேசினோம். “இது ஒரு கலாசார சீர்கேடு. ஒரு விலங்கு வேண்டுமானால் உறவுமுறை தெரியாமல் மற்றொரு விலங்குடன் உறவுகொள்ளும். ஆனால், நமக்கு அது முற்றிலும் மாறுபட்டது. குடும்ப உறவுகளில் இப்படி ஈடுபடுபவர்கள் நிச்சயமாகத் தண்டனைக்கு உரியவர்கள். குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் பெண்கள், இதை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள். குடும்ப மானம் போய்விடும் எனப் பயப்படுகிறார்கள். இந்த எண்ணத்தையே காமவெறி பிடித்த மிருகங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்

கொள்கிறார்கள். அந்தப் பெண்கள் கர்ப்பமாகி விட்டால், தங்கள் மானம் போய்விடும் என்று கொலை செய்யவும் துணிகிறார்கள்” என்றார்.

சமூகம் அதற்கான நல்ல அம்சங்களை நாளுக்கு நாள் இழந்து வருவதுதான் வேதனைக்குரியது!

- ஜெ.அன்பரசன்

தலைநகரே முதலிடம்!

• இந்திய அளவில் குடும்பப் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2012-ல் 346 ஆக இருந்தது. 2013-ல் 489 ஆக அதாவது, 43 சதவிகிதம் அதிகரித்து உள்ளது.

• குடும்பப் பாலியல் வன்முறையில் தலைநகர் டெல்லிதான் முதல் இடம் வகிக்கிறது.  2012-2013-ம் ஆண்டு வரை 350-ல் இருந்து 501 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

• இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. இங்கு பதிவு செய்யப்பட்ட கணக்கின்படி 78-ல் இருந்து 108 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

• 14-18 வயது வரை உள்ளவர்கள்தான் அதிகமாக பாலியல் வன்முறை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

வட இந்தியாவில் அதிகம்!

• இன்செஸ்ட் (Incest) எனப்படும் நெருங்கிய உறவுகளுக்குள் பாலியல் உறவுகள் வைத்துக் கொள்ளும் சம்பவங்கள் இந்தியாவில் வட மாநிலங்களில் அதிகம் இருக்கின்றன என தேசியக் குற்ற ஆவணக்காப்பகத்தின் 2013-ம் ஆண்டு அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது.

‘குட் டச்’... ‘பேட் டச்!’

எந்தெந்த வயதில்... குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அவசியம் சொல்லித்தர வேண்டியவை:

• 3 - 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றிய புரிதலைக் கற்றுத்தர வேண்டும்.

• 5 - 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றியும், 8 - 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தனிமனிதப் பாதுகாப்புப் பற்றியும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கும் வழிமுறைகளையும் சொல்லித்தர வேண்டும்.

• 13 - 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய புரிதல் மற்றும் உடலில் நிகழும் மாற்றங்களைப் பற்றி தெளிவாகச் சொல்லித்தர வேண்டும்.

குழந்தைகளுக்கு முன்பாக... நோ!

முறையற்ற பாலுணர்வு, செக்ஸ் வக்கிர எண்ணங்கள் தோன்றுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன?

குழந்தைகளுக்கு என்ன தெரியப் போகிறது என நினைத்து அவர்கள் முன்னாலேயே, பெற்றோர்கள் உடை மாற்றுவது, குழந்தைதானே என நினைத்து அவர்கள் இருக்கும்போதே மர்மப் பிரதேசங்களைத் தொட்டு விளையாடுவது - உடலுறவில் ஈடுபடுவது தவறு. அந்தச் சமயத்தில் அதுபற்றிக் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்றாலும், நாளடைவில் அந்தக் காட்சிகள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும். அவர்கள், பெரியவர்களாக வளரும்போது, இது நம் குடும்பம் என்ற எண்ணம் மறைந்து, செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான நபர்கள் என்ற எண்ணமே மேலோங்கும். குடும்பத்தின் வளர்ப்புச் சூழ்நிலை மோசமாக இருந்தாலும், குழந்தைகளுக்குப் பாலின அறிவு இல்லையென்றாலும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாக வளர்க்கப்பட்டாலும் இதுபோன்ற எண்ணம்கொண்டவர்களாக பிள்ளைகள் வளர்வார்கள்.