Published:Updated:

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...
பிரீமியம் ஸ்டோரி
சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

செம்மர வழக்கில் திருவண்ணாமலை தமிழர்கள்!பரிதாபம்

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

செம்மர வழக்கில் திருவண்ணாமலை தமிழர்கள்!பரிதாபம்

Published:Updated:
சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...
பிரீமியம் ஸ்டோரி
சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...
சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

டந்த ஆண்டு ஏப்ரலில் செம்மரம் கடத்தியதாகத் திருப்பதி வனப்பகுதியில் வைத்து 20 தமிழர்களைச் சுட்டுக்கொன்று, இந்தியாவையே நடுங்கவைத்தது ஆந்திர போலீஸ். சுட்டுக்கொல்லப்பட்டதில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள். கடந்த வாரமும் செம்மரம் வெட்ட வந்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் கைதாகியிருக்கிறார்கள். இவர்களில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்ட மலைவாழ் மக்கள், 2 பேர் வேலூர். இதனால், மீண்டும் என்கவுன்டர் பயம் சூழ்ந்துள்ளது அவர்கள் உறவினர்களிடம்.

போளூர் தாலுக்காவில் உள்ள மலைக் கிராமமான கீழ்செண்பகதோப்பைச் சேர்ந்த அறிவழகன், “எங்க அண்ணன் ‘போர்’ போடற வண்டி ஆபரேட்டர் வேலை செய்றாரு. வியாழக்கிழமை காலைல, அண்ணிக்கிட்டச் சொல்லிட்டு வேலைக்குக் கிளம்பினாரு. ஆனா, அவரை மரம் வெட்ட வந்ததாச் சொல்லி ஆந்திரா போலீஸ் கைதுபண்ணியிருக்கிறதா டி.வி-யில காட்டினாங்க. எங்களுக்குக் கடத்தல் தொழில் எல்லாம் தெரியாது. எங்க ஆளுங்களை எப்படியாவது மீட்டுத் தாங்க” என்றார்.

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

அதே கிராமத்திலிருந்து கைதாகியிருக்கும் முருகேசனின் அம்மா கண்ணம்மா, “என் பையன் திருப்பதி கோயிலுக்குப் போனான். அவனை மரம் வெட்ட வந்ததாச் சொல்லி கைதுபண்ணியிருக்காங்க. அவன் சட்டை துணி மட்டும்தான் கொண்டு போனான். அவங்ககிட்ட இருந்து பிடிச்சதா காட்டின கோடாலி எல்லாம் போலீஸ்காரங்களே வாங்கி வெச்ச மாதிரி புதுசா ஒண்ணுப்போலவே இருக்கு. அவன் வேலைக்குப் போனாதான் எங்க வீட்ல அடுப்பு எரியும்” என்று விம்முகிறார்.

படவேடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், “இந்த மக்களோட ஏழ்மையையும் படிப்பறிவு இல்லாததையும் பயன்படுத்தி செம்மர ஏஜென்டுங்க ஆசை வார்த்தை பேசி அழைச்சிட்டுப் போய் சிக்கல்ல மாட்டிவிடறாங்க. ஏஜென்ட்களுக்குள்ள போட்டியால இன்னொரு தரப்பு ஏஜென்ட்களே போலீஸுக்குத் தகவல் கொடுத்து மாட்டிவிடற வேலையும் நடக்குது. இப்படி மலைவாழ் மக்களோட உழைப்பைத் தவறான வழியில திருடி காசு பார்க்குற ஏஜென்டுங்களை இதுவரை போலீஸ் பிடிச்சதே இல்லை” என்கிறார் காட்டமாக.

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

இந்தப் பகுதியில் வனச்சரகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ராஜசேகர், “இந்தப் பகுதியில் உள்ளவர்கள் காட்டிலேயே பிறந்து வளர்வதால அவங்களுக்குக் காட்டைப் பற்றிய அறிவு அதிகம். மரம் வெட்டுவது, அதைச் சுமந்துக்கிட்டு வரதும் இவங்களால சுலபமாச் செய்ய முடியும். அதனால செம்மரம் வெட்ட அவங்களுக்குப் பணத்தாசை காட்டிக் கூட்டிக்கிட்டு போறது நடக்குது’’ என்கிறார்.                 

தமிழக அரசு இந்த வழக்கினை விசாரிக்க இரண்டு வழக்கறிஞர்களை நியமித்துள்ளது. அவர்களில் ஒருவரான ரியாஸிடம் பேசினோம். ‘‘வன அலுவலர்களைக் கொன்றதாக ஆந்திர சிறையில் கைதாகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 288 தமிழர்களை முன்பு சில மாதங்களுக்கு விடுவித்தோம். வன அதிகாரிகள் கொலை வழக்கில் மொத்தம் 341 பேரை கைது செய்தார்கள். காவல் துறை சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டவை என்பதை வாதாடி நிரூபித்து, விடுதலை பெற்றுக் கொடுத்தோம். 32 பேர் கைதான வழக்கை இப்போதுதான் ஆராய தொடங்கியிருக்கிறோம்” என்றார்.

சிக்கிக்கொள்ளும் அப்பாவிகள்... சுகபோக ஏஜென்டுகள்...

திருப்பதி எஸ்.பி ஜெயலட்சுமியிடம் பேசினோம். ‘‘பத்திரிகையாளர் சந்திப்பிலேயே டி.எஸ்.பி தகவல் கொடுத்துவிட்டார்’’ என்று இணைப்பைத் துண்டித்துக்கொண்டார்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு முயற்சிசெய்ய வேண்டும். பொய் வழக்குப் போடுவதை ஆந்திர அரசு நிறுத்தவேண்டும்.

- அ.அச்சணந்தி, ம.சுமன், படங்கள்: ச.வெங்கடேசன், கா.முரளி