‘பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எப்போது நீதி கிடைக்கும்?’ - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி | India is waiting, speak up: Rahul Gandhi dares PM Modi to break his silence on 'growing violence against women'

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (14/04/2018)

கடைசி தொடர்பு:11:12 (14/04/2018)

‘பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எப்போது நீதி கிடைக்கும்?’ - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எப்போது நீதி கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் எப்போது நீதி கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீரில் பெண் குழந்தை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் அவரது சகோதரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரின்மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயன்ற அப்பெண்ணின் தந்தை காவல்துறை விசாரணையின்போது மர்மமாக மரணமடைந்தார்.

ராகுல்காந்தி

இதுபோன்ற சம்பவங்களைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு டெல்லியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணியாகச் சென்றனர். அந்தப் பேரணியின்போது பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரங்களில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.

டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கர் நினைவு இல்லத் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ‘எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும்’ என்று கூறினார்.

பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேள்வி எழுப்பும் விதமாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ‘நீண்ட மவுனத்துக்குப் பிறகு வாய் திறந்திருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி. நமது மகள்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளீர்கள். அது எப்போது என்பதை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க