Published:Updated:

மாநிலங்களவை எம்.பி-யாக மீண்டும் பதவியேற்றார் அருண்ஜெட்லி

மாநிலங்களவை எம்.பி-யாக மீண்டும் பதவியேற்றார் அருண்ஜெட்லி
மாநிலங்களவை எம்.பி-யாக மீண்டும் பதவியேற்றார் அருண்ஜெட்லி

மாநிலங்களவை எம்.பி-யாக மீண்டும் பதவியேற்றார் அருண்ஜெட்லி

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று மாநிலங்களவை எம்.பியாக மீண்டும் பதவியேற்றார்.

மாநிலங்களவை எம்.பி-யாக மீண்டும் பதவியேற்றார் அருண்ஜெட்லி

உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர்,மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக இருந்த 58 எம்.பி பதவிகளுக்குக் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் உத்திரபிரதேச எம்.பி-யாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு அனைத்து எம்.பி-களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் அருண்ஜெட்லி மட்டும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அறுவை சிகிச்சை நடைபெற்றது. கடந்த 15 நாள்களாக வீட்டில் ஓய்வு எடுத்த அவர் உடல் நிலை சரியானதும், இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.

அருண் ஜெட்லி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜெட்லியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அவர் மீண்டும் எம்.பி-யாக பதவியேற்றார். 

அடுத்த கட்டுரைக்கு