Published:Updated:

விஜய் - அமலாபால் காதல் - முதல் விவாகரத்து வரை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜய் - அமலாபால் காதல் - முதல் விவாகரத்து வரை...
விஜய் - அமலாபால் காதல் - முதல் விவாகரத்து வரை...

பிரிவு

பிரீமியம் ஸ்டோரி

‘கண்டிஷனை’ மீறியதால் முறிவு!

விஜய் - அமலாபால் காதல் - முதல் விவாகரத்து வரை...

பிரபலங்கள் பலருடைய மணவாழ்க்கை காதலில் தொடங்கி விவாகரத்தில் முடிகிறது என்பது சோகமானது. அந்த வரிசையில், இயக்குநர் விஜய் - அமலாபால் தம்பதியர் சேர்ந்திருக்கிறார்கள்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இரண்டாவது மகன் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அப்போது, அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து, ‘தலைவா’ படப்பிடிப்பின்போது அவர்கள் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்தது. இவர்களின் திருமணத்துக்கு அமலாபால் குடும்பத்தினர் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஓகே சொன்னார்கள். ஆனால் விஜய் குடும்பத்தினர், சற்று தயக்கத்துடன் திருமணத்துக்குச் சம்மதித்தார்கள். 2014 ஜூன் 12-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். 

திருமணத்தின்போது விஜய் குடும்பத்தினர் போட்ட ஒரே கண்டிஷன், ‘திருமணத்துக்குப் பிறகு, படங்களில் அமலாபால் நடிக்கக் கூடாது’ என்பதுதான். அதற்கு, அமலாபால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு மலையாளத்தில், ‘மிலி’, ‘லைலா ஓ லைலா’ மற்றும் தமிழில், சூர்யாவுடன் ‘பசங்க-2’ என படங்களில் தொடர்ந்து நடித்தார். அப்போதே, விஜய் - அமலாபால் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது. கடைசியாக, தனுஷ் தயாரிப்பில், ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்தார் அமலாபால். அப்போது, விரிசல் அதிகமானது. 

அமலாபால் - விஜய் பிரிவு பற்றிய செய்திகள் ஊடகங்களில் கசிந்தபோது, அது வெறும் வதந்தி என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் பிரியப்போகிறார்கள் என்கிற தகவல் விஜய்யின் தந்தை மூலமாக வெளிவர, பிரச்னை வெடித்தது. விஜய், அமலாபால் இருவரும் புரிதலுடன் பிரிவது என்று முடிவெடுத்தனர். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மரியா, ஆறு மாதங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தார். விவாகரத்து மனுவை அளிக்க அமலாபால், விஜய் இருவருமே நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதுகுறித்து அமலாபாலின் கருத்தைக் கேட்க முயற்சி செய்தோம். அவர் பேசவில்லை.

விஜய் - அமலாபால் காதல் - முதல் விவாகரத்து வரை...

அமலாபாலின் வழக்கறிஞர் சிந்துவிடம் பேசினோம். ‘‘பொருத்தமின்மை மற்றும் கருத்து வேறுபாடு என்ற இரண்டு காரணங்களால் பிரிவதாக மனுவில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். அடுத்த வாய்தா 2017 பிப்ரவரி மாதம் 11-ம் தேதி. இருவருமே புரிந்துணர்வுடன் பிரிவதாகச் சொல்லி இருப்பதால், எளிதாக விவாகரத்து கிடைத்துவிடும். பொதுவாக, விவாகரத்து மனு கொடுக்கப்படும்போது மனைவி சார்பில் பராமரிப்பு மானியம் மற்றும் ஜீவனாம்சத்துக்காக ஒரு பெரிய தொகை கேட்கப்படும். ஆனால், அமலாபால் ஜீவனாம்சம் எதுவும் கேட்கவில்லை’’ என்றார்.

இயக்குநர் ஏ.எல்.விஜய், ‘‘எங்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டு குணங்களும்தான் ஒரு வலுவான திருமண வாழ்வுக்குச் சிறந்த பாலமாகச் செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்த பிறகு திருமண வாழ்வைத் தொடர்வதில் அர்த்தம் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிவோம் எனக் கனவில்கூட நான் நினைத்ததில்லை. ஆனால், இன்று அது நடந்துவிட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக்கொண்டு, எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்துவிட்டேன்’’ என்று அறிக்கையாகவே வெளியிட்டார்.

ஏ.எல்.விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன், ‘‘என் மகனின் அறிக்கையே எங்கள் சார்பில் வெளியிடும் கருத்து. இந்த விவாகரத்து குறித்து நாங்கள் இனி எதுவும் பேசுவதாக இல்லை’’ என்றார்.

விவாகரத்து... வரமா, சாபமா?

- பி.எஸ்.முத்து படம்: எம்..உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு