' எடியூரப்பா மீது நம்பிக்கை இல்லை!' - பா.ஜ.க-வைப் பதறவைத்த பசவராஜ் பேட்டி

`லிங்காயத்து சமூகத்தினர், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தர மாட்டார்கள்' என்று ராஷ்ட்ரிய பசவசேனா பொதுச் செயலாளர் ஏ.பி.பசவராஜ் கூறியிருப்பது, கர்நாடக பா.ஜ.க-வினரை அதிரவைத்துள்ளது. 

மோடி

கர்நாடக சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் மே12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா அரசுக்கு, மிகப்பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முன்வைத்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டம் வகுத்துள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராஷ்ட்ரிய பஸ்வசேனா பொதுச்செயலாளர் ஏ.பி. பசவராஜ்,` லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது. அவரை நாங்கள் தலைவராகக் கருதவில்லை.

அவர் மீதும் மோடி, அமித்ஷா மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், 2014-ம் ஆண்டு தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றபோதும், மத்திய அமைச்சரவையில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை. லிங்காயத் சமூகத்தினர் என்றுமே பா.ஜ.க-வுக்கு ஆதரவு தர மாட்டார்கள்' என்றார். கடந்த மார்ச் மாதம், சித்தராமையா அரசு, லிங்காயத் சமூகத்தினரை சிறுபான்மையினராக அங்கீகரித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் பிரசாரத்தில் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!