`மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பணகை' - சர்ச்சையில் சிக்கிய உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ

` மேற்குவங்கத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். இதைப்பற்றி அம்மாநில முதல்வர் கண்டுகொள்வதில்லை. மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பணகை' என விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர். 

மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வின் எம்.பி, எம்.எல்.ஏ-க்களில் சிலர், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிவருகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்த பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக பா.ஜ.க எம்.பி-க்களிடம் உரையாடினார். அவர் பேசும்போது, ' எந்த விஷயத்தையும் முழுமையாக அறியாமல் ஊடகங்கள் முன் பேசாதீர்கள்' எனக் கடுமையாக எச்சரித்தார். 

சுரேந்திர சிங்

இந்நிலையில், உ.பி மாநிலத்தின் பைரியா தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங், மேற்கு வங்க முதல்வர்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வெளியிட்டிருக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தர் சிங், ` வங்கதேசத்திலிருந்து பயங்கரவாதிகள் மேற்குவங்க மாநிலத்துக்குள் நுழைந்து, இந்துக்களை சித்ரவதைசெய்கின்றனர். மேற்கு வங்கத்தில், இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தெருக்களில் மக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள். 

ஜம்மு-காஷ்மீர் போன்று மேற்குவங்காளம் உருவெடுத்துவருகிறது. அம்மாநில முதல்வர் மம்தா, இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. சூர்ப்பணகை கதாப்பாத்திரத்தில் அவர் கட்சிதமாக நடித்துவருகிறார். ராமாயணத்தில், சூர்ப்பணகையைத் தோற்கடித்த லட்சுமணன் போல, மோடியும் அமித் ஷாவும் சூர்ப்பணகையின் மூக்கை வெட்டுவார்கள்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!