10 எம்.பி-க்கள்; 17 எம்.எல்.ஏ-க்கள்! - சர்ச்சைப் பேச்சில் சிக்கியவர்களில் பா.ஜ.கவினர் முதலிடம்!

வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பா.ஜ.க எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் முதலிடம் பிடித்துள்ளனர். 

பா.ஜ.க

தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மக்களிடம் வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில் பேசிய வகையில் பேசியதாக 58 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த பத்து எம்.பி-க்கள் 17 எம்.எல்.ஏ-க்கள் என மொத்தம் 27 பேர் மீது வெறுப்பு உணர்வைத் தூண்டும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது, பா.ஜ.க நிர்வாகிகள் மீதே அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் முஸ்லிம் கட்சி (All India Majlis-e-Ittehadul Muslimeen) ஒன்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் பிடித்திருக்கின்றன. 

இதுகுறித்துப் பேசிய ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பினர், `மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திர உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. இருப்பினும், முறைகேடாகப் பேசுவது, தனிப்பட்ட முறையில் அச்சுறுத்திப் பேசுவது, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுவது, குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது, மற்றவர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுவது, இனம், மொழி, மதம், சமூகம், பிறப்பு, குடியிருப்பு, மொழி போன்றவற்றை முன்வைத்து வேறுபடுத்திப் பேசுவது உள்ளிட்டவை பேச்சு சுதந்திரச் சட்டத்தில் வராது. அதனால், இவ்வாறு பேசுவது வெறுப்புஉணர்வைத் தூண்டும் குற்றமாகக் கருதப்படுகிறது' என்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!