`முன்னாள் முதல்வருக்கு ஒரு சிலை கூட இல்லையா..' -ஆச்சர்யமாகக் கேட்ட யோகி ஆதித்யநாத் 

முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் ஹேமாவதி நந்தன் பாஹுகுணாவின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட உ.பி  முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரை நினைவுகூரும் வகையில் ஒரு சிலைகூட இல்லையா என்று ஆதங்கத்துடன் கேட்டார். 

யோகி ஆதித்யநாத்

முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் ஹேமாவதி நந்தன் பாஹுகுணாவின் 99 -வது பிறந்த நாள் விழா லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத், `ஹேமாவதி நந்தன் பாஹுகுணா தனது வாழ்நாள் முழுவதையும் ஏழைகளின் வளர்ச்சிக்காகச் செலவழித்தவர். இங்கே, பாஹுகுணாவை நினைவுகூரும் விதமாக, ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை. தலைவர் பெயரில் எந்தச் சாலையும் இல்லை' என்று ஆதங்கத்தோடு கூறினார். 

தொடர்ந்து, அன்றைய காலகட்டத்தில் அரசியலில் புகழ்மிக்கவராகத் திகழ்ந்த பாஹுகுணா 1977-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது அவரது மகள் ரீட்டா பாஹூகுணா ஜோஷி கூறித்தான் தெரிந்தது. அத்தகைய ஒரு பெரிய தலைவரை காங்கிரஸ் புறக்கணித்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் எனக் காங்கிரஸார் செயல்படுகின்றனர் ' என்று காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசினார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!