Published:Updated:

தமிழக கட்சிகள் எதிர்ப்பு:டெல்லி பயணத்தை கைவிட்டார் ராஜபக்சே!

தமிழக கட்சிகள் எதிர்ப்பு:டெல்லி பயணத்தை கைவிட்டார் ராஜபக்சே!
தமிழக கட்சிகள் எதிர்ப்பு:டெல்லி பயணத்தை கைவிட்டார் ராஜபக்சே!
தமிழக கட்சிகள் எதிர்ப்பு:டெல்லி பயணத்தை கைவிட்டார் ராஜபக்சே!

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, இலங்கை அதிபர் ராஜபக்சே தனது பயணத்தை மாற்றிக்கொண்டு, டெல்லி செல்வதை தவிர்த்துள்ளார்.

அதற்குப் பதிலாக நேரடியாக ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கிற்கு செல்கிறார். அங்கிருந்து தனியார் பிரத்யேக விமானத்தில் பீகாரில் உள்ள புத்த கயா செல்லும் அவர், இன்று மாலை திருப்பதி செல்கிறார்.

அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலைக்கு செல்லும் ராஜபக்ச, இரவு மலையிலேயே தங்குகிறார். நாளை அதிகாலையில் திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்யும் அவர், காலை 9 மணிக்கு சிறப்பு விமானத்தில் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்.

அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

##~~##
இதற்கிடையே ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைநகர் டெல்லி, திருப்பதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் பிரதமர் இல்லத்தை நோக்கிப் பேரணி செல்ல மதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும ஏராளமான தமிழ் அமைப்பினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திமுகவினர் கறுப்புக்கொடி அணிந்து ராஜபக்சேவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளனர்.