'ராமரும், கிருஷ்ணரும் கூட அரசியல்வாதிகள்தான்!’ - ராஜ்நாத் சிங் பேச்சு

பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரும் அரசியல் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரும் அரசியல் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.  

ராஜ்நாத் சிங்

சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் ராஜ்நாத் சிங், 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று லக்னோ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ' சுதந்திரம் அடைவதற்கு முன்பே நம் நாட்டில் அரசியல் இடம் பெற்றிருக்கிறது. அவ்வளவு ஏன், ராமரும், கிருஷ்ணரும் கூட அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணர், தனது மதத்திற்காக அரசியலைச் செய்தார். ராம ராஜ்யத்தை கட்டியெழுப்புவதற்காகத் தீவிர பக்தியுடன் ராமர் அரசியல் செய்தார்.

ராமர் கையில் அரசியல் இருந்தபோது, அது பக்தியாக இருந்தது. கிருஷ்ணர் தந்திரத்தால் அரசியல் செய்தார். காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் காலத்தில் அதிகாரத்துக்காக நடந்தது. அதேநேரம் ஆசாத் மற்றும் அஷ்பக் ஆகியோருக்கு சுதந்திரம் பெறுவதே அரசியல் ஆனது. அதுபோல், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் கைகளில் அரசியல் இருக்கும்போது, அது பணத்துகானதாக மாறிப் போகிறது. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அது, பேரழிவாகிப் போகிறது. எனவே, யார் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரசியலில் நோக்கம் அமைகிறது’’ எனப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!