'தேர்தல் முடியட்டும்; விவசாயக் கடன் தள்ளுபடி!' - பிரசாரத்தில் பேசிய எடியூரப்பா | after election former's loan wavier, statement by yediyurappa

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (30/04/2018)

கடைசி தொடர்பு:12:00 (30/04/2018)

'தேர்தல் முடியட்டும்; விவசாயக் கடன் தள்ளுபடி!' - பிரசாரத்தில் பேசிய எடியூரப்பா

கர்நாடக சட்டசபைக்குத் தேர்தல் முடிந்ததும், தேசிய வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யும்' எனப் பிரசாரத்தில் பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா. 

எடியூரப்பா

கர்நாடக மாநிலச் சட்டசபைக்கு வரும் மே-12ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் 60 பிரசாரப் பேரணிகளில் கலந்துகொள்ள இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

இந்நிலையில், நேற்று கலபுரகி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார் எடியூரப்பா. அப்போது அவர் பேசும்போது, 'காங்கிரஸை நிராகரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். பா.ஜ.க தலைமையில் புதிய அரசைக் கட்டமைக்க மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். நாங்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். பிரதமர் மோடியின் பிரசாரத்தால் பா.ஜ.க-வுக்கு இன்னும் கூடுதல் வாக்குகள் கிடைக்கும். பிரதமர் முன்னிலையில் முதல்வராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வேன். இந்த விழாவில் மூன்று லட்சம் முதல் நான்கு லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள்' என்றார்.