Published:Updated:

வீராணம் ஏரி நீர் மட்டம் குறைந்தது!

வீராணம் ஏரி நீர் மட்டம் குறைந்தது!
வீராணம் ஏரி நீர் மட்டம் குறைந்தது!
வீராணம் ஏரி நீர் மட்டம் குறைந்தது!

சென்னை: வீராணம் ஏரியின் நீர் மட்டம் 65 மில்லியன் கனஅடியாக குறைந்ததால், சென்னைக்குக் குடிநீர் அனுப்பும் அளவு விநாடிக்கு 13 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாகும்.ஏரியிலிருந்து புதிய வீராணம் திட்டத்தின் மூலம் தினமும் விநாடிக்கு 76 கன அடி நீர் சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வந்தது.

##~~##
வீராணம் ஏரி மூலம் 1 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்பட்டு கல்லணை,கீழணை வருகிறது. கீழணையிலிருந்து வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு நீர் வருகிறது.
இந்த ஆண்டு மழை பொய்த்ததாலும்,மேட்டூரிலிருந்து போதிய அளவு நீர் திறந்து விடப்படாததாலும் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து சனிக்கிழமை நிலவரப்படி ஏரியில் 65 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது விநாடிக்கு 13 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் இன்னும் ஓரிரு தினங்களில் சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.