'வடமாநிலங்களில் அல்ல; கர்நாடகாவில்தான் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம்'! பிரசாரத்தில் யோகி சொன்ன தகவல் | compare to northern state farmer suicide is high in Karnataka statement by yogi adityanath

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (04/05/2018)

கடைசி தொடர்பு:12:50 (04/05/2018)

'வடமாநிலங்களில் அல்ல; கர்நாடகாவில்தான் விவசாயிகள் தற்கொலைகள் அதிகம்'! பிரசாரத்தில் யோகி சொன்ன தகவல்

உத்தரப்பிரதேசத்தில், பா.ஜ.க ஆட்சிக்குப் பிறகு `சட்ட விரோதச் செயல்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகம்' என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். 

யோகி

கர்நாடக சட்டசபைத் தேர்தல், வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஐந்து நாளில் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க-வும் கடும் போட்டிபோட்டுவருகின்றன. பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரசாரத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாகக் குற்றம் சாட்டிவருகின்றனர். 

இந்நிலையில், உத்தர கன்னடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், "ஏடிஎம்-களில் பணத்தைச் சூறையாடுவதுபோல, கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சியை காங்கிரஸ் சூறையாடிவிட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்குமுன், அங்கு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் நடவடிக்கைகள் அதிகரித்  திருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு பயங்கரவாதிகள், சமூக விரோத சக்திகள் மாநிலத்தை விட்டு ஓடிவிட்டன' என்றார். 

தொடர்ந்து, கர்நாடகாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை உ.பி-யுடன் ஒப்பிட்டுப் பேசிய யோகி, "உத்தரப்பிரதேசத்தில் 23 கோடி மக்கள் வாழ்கின்றனர். இது, கர்நாடகாவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். ஆனால், வடக்கு மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை. கர்நாடக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகமாக இருக்கிறது" என்று பேசினார்.