பா.ஜ.க -வின் தாரக மந்திரம் இதுதான்! - பிரதமர் மோடி அதிரடி | modi said India is marching from women's development to women led development

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (04/05/2018)

கடைசி தொடர்பு:15:10 (04/05/2018)

பா.ஜ.க -வின் தாரக மந்திரம் இதுதான்! - பிரதமர் மோடி அதிரடி

'பெண்கள் தலைமையில் இந்தியா முன்னேறிச் செல்கிறது. இதுதான் பா.ஜ.க - வின் தாரக மந்திரம்' என்று பிரதமர் மோடி 'நமோ ஆப்' செயலி வாயிலாக கர்நாடக வாக்காளர்களிடம் பேசியுள்ளார். 

மோடி


வரும் மே 12- ம் தேதி நடக்க உள்ள கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க-வினர் செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கர்நாடகாவில் முகாமிட்டு, தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில், 'நமோ ஆப்' செயலி வாயிலாக கர்நாடகா பா.ஜ.க மகளிர் அணித் தொண்டர்களுடன் மோடி நேரடியாக இன்று பேசினார். "பா.ஜ.க-வை பொறுத்தவரை பெண்களே முதன்மையானவர்கள். பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 'முத்ரா' திட்டத்தின் மூலம் சுமார் ஒன்பது கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். 

திறமையான பெண்களுக்கு அமைச்சரவையிலும் முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சீனாவில் நடந்த உச்சி மாநாட்டில், வெளியுறவுத்துறை அமைச்சர் (சுஷ்மா ஸ்வராஜ்) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் (நிர்மலா சீதாராமன்) ஆகியோர் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படம், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது. பெண்களின் முன்னேற்றம் என்ற நோக்கில் சென்று கொண்டிருந்த இந்தியா, தற்போது பெண்கள் தலைமையில் முன்னேறிச் செல்கிறது.'முதலில் பெண்கள்' இதுதான் பா.ஜ.க-வின் மந்திரம்' மேலும், கர்நாடகத் தேர்தலில் வெற்றிபெற வாக்குச்சாவடிகளில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.