Published:Updated:

`ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறார் கலெக்டர்’ – கொதிக்கும் டிடிவி ஆதரவாளர்கள்..!

`ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறார் கலெக்டர்’ – கொதிக்கும் டிடிவி ஆதரவாளர்கள்..!
`ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறார் கலெக்டர்’ – கொதிக்கும் டிடிவி ஆதரவாளர்கள்..!

`ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறார் கலெக்டர்’ – கொதிக்கும் டிடிவி ஆதரவாளர்கள்..!

மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராடிவரும் நிலையில், அ.ம.மு.க சார்பில் வரும் 6-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் பொது இடங்களில் பேனர்கள், விளம்பரப்  பலகைகள் வைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அச்சக உரிமையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்துநிலையங்கள் போன்ற இடங்களில் இனி பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது எனவும், போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் பேனர்கள் உடனே அகற்றப்படும் எனவும், பேனர் வைக்கும் முன் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் எனவும், அந்த அனுமதிக் கடித எண், நாள், அனுமதி காலம் போன்றவற்றை அச்சிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக அச்சக உரிமையாளர்களுக்கு விதிமுறைகள் குறித்து உத்தரவிடப்பட்டது. 

இதற்கு டி.டி.வி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய போது, ‘’இத்தனை நாள் பன்னீர்செல்வம் பொது இடத்தில் பேனர் வைக்காமல் தனது சொந்த இடத்தில் தான் பேனர் வைத்தாரா? எத்தனை முறை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கினார் என்று சொல்லச் சொல்லுங்கள்? வரும் 6-ம் தேதி டி.டி.வி தினகரன் போடியில் நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில் எங்களை திட்டமிட்டே பலிவாங்கும் நோக்கத்திற்காக இப்படி ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் சொல்வதைக் கேட்டு இப்படி செய்கிறார் கலெக்டர்’’ என்றனர். இந்நிலையில் போடி நகரத்தில் சாலையோரம் டி.டி.வி ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர்களை போலீசார் அகற்ற இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி பேனர்கள் அகற்றப்பட்டால், போடி பகுதியில் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு