கிரிமினல் வேட்பாளர்கள்; கோட்டீஸ்வர வேட்பாளர்கள்! கர்நாடகாவில் முதலிடம் பிடித்த கட்சி எது? | Association for Democratic Reforms report about karnataka election

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:25 (07/05/2018)

கிரிமினல் வேட்பாளர்கள்; கோட்டீஸ்வர வேட்பாளர்கள்! கர்நாடகாவில் முதலிடம் பிடித்த கட்சி எது?

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 254 வேட்பாளர்கள்மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில், பா.ஜ.க வேட்பாளர்தான் முதலிடம் பிடித்துள்ளார். கோடீஸ்வரப்பட்டியலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உள்ளார். 

பட்டியல்

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ளன. காங்கிரஸ் பா.ஜ.க மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. 2,560 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில், 1,090 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். இவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை அலசி ஆராய்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்) பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது. 

அதில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 83 வேட்பாளர்கள்மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 59 காங்கிரஸ் வேட்பாளர்களும் 41 மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களும் கிரிமினல்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுயேச்சை, மற்ற கட்சி வேட்பாளர்களும் விதிவிலக்கல்ல. அவர்களில் 108 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகளைப் பொறுத்தவரை பா.ஜ.க வேட்பாளர்கள்தான் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ்

ஆனால், கோடீஸ்வரர் வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க-வினரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணா. கோடீஸ்வரர் வேட்பாளர்களில் முதல் மூன்று இடங்களை காங்கிரஸ் கட்சியினர் பிடித்துள்ளனர். மேலும், 207 காங்கிரஸ் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் எனவும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ.க வேட்பாளர்கள் 208 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
 

Source : Association for Democratic Reforms


[X] Close

[X] Close