`யெஸ்... ஒய் நாட்?' - அடுத்த பிரதமர் கேள்விக்கு ராகுல் பதில்

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்றால் `நான் பிரதமர் ஆவேன்' எனப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. 

ராகுல் காந்தி

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார் ராகுல்காந்தி. பிரதமர் மோடியும் ஐந்து நாளில் பதினைந்து பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, `பிரதமர் மோடியிடம் ஒரே கேள்வியைத்தான் முன்வைக்கிறோம். ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்தவரை எப்படி முதல்வர் வேட்பாளராகத் தேர்வு செய்தீர்கள். இதை நான் திரும்பவும் கேட்கிறேன். கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படுகிறார் அமித்ஷா. 'அவர் கொலைக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்' என்பதை இந்திய மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்' என்றார்.

இதற்கு முன்னதாக, பெங்களூருவில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தியிடம் `வருகின்ற 2019-ம் ஆண்டு பிரதமர் ஆவீர்களா' என்ற கேள்வியைக் கேட்ட நிருபர்களிடம், 'யெஸ்... ஒய் நாட்? 2019-ல் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்றால், நான்தான் பிரதமர்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!