`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு | I went 29 times to Delhi. Even then the Centre has been negligent towards AP, said Chandrababu Naidu

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (12/05/2018)

கடைசி தொடர்பு:10:10 (12/05/2018)

`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு

தங்களின் மாநில வளர்ச்சிக்காக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ளார். 

சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், `மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அப்போதெல்லாம், நிச்சயம் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிஜேபி-யின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பத்து ஆண்டுகளுக்கு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். 

ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம், அலட்சியம் செய்து வருகிறார். இது தொடர்பாக 29 முறை டெல்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை. நீதிக்காகப் போராடி வருகிறோம். சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தனிநபரின் பிரச்னை அல்ல. இது மாநில நலனுக்கான பிரச்னை. அவரவர், மாநிலத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும், கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும்' என வலியுறுத்திப் பேசினார். 


[X] Close

[X] Close