Published:Updated:

கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?
கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?

கர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..?

கர்நாடக சட்டமன்றமான விதான சவுதாவில் எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்ததை ஒட்டுமொத்த இந்தியாவே நேற்று கவனித்தனர். இந்தச் சம்பவம் நிகழ மிக முக்கிய ராஜதந்திரியாகத் திகழ்ந்தவர் டி.கே.சிவக்குமார். இந்த உறுதியான வெற்றியைப் பெற்று தந்த டி.கே.சிவக்குமாருக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகா சட்டமன்றத்தில் பாஜக தங்களின் பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை காத்து நிற்க காங்கிரஸ் தரப்பில் தளபதியாக முன்னிறுத்திய நபர் தான் டி.கே.சிவக்குமார். ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார் முன்னால் மின்சாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது அமைச்சராக அடையாளம் காணப்பட்டவர். கர்நாடகத்தில் மட்டும் இல்லாமல் காங்கிரஸ்க்கு இந்தியா அளவில் நெருக்கடி வந்தபோது எல்லாம் காங்கிரஸ்சை காத்து நின்றுள்ளார். 2002-ல் மகாராஷ்டிராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் வெற்றி பெறவும், 2017-ல் அகமது பட்டேல் ராஜ்ய சபாவில் வெற்றி பெறவும் உறுதுணையாகக் காத்து நின்றவர். தற்போது கர்நாடகாவில் குமாரசாமி முதல்வர் ஆக காங்கிரஸ் எம்.எல்.ஏ-களை மிகக் கவனமாக காத்து நின்று ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார் டி.கே.சிவக்குகமார். 

இது போன்ற வெற்றிகளை காங்கிரஸுக்கு பெற்று தந்த டி.கே.சிவக்குமார் பதவிகளை தேடிச் செல்லவில்லை, அதற்கான பரிசுகளை காங்கிரஸ் கட்சியே முன்வந்து அவருக்குத் தந்தது, தற்போதைய மாநில தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வர் பதவியை ஏற்க உள்ளதால், கர்நாடக மாநில மூத்த நிர்வாகிகளிடம் விவாதித்த ராகுல் காந்தி கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு