Published:Updated:

இப்படிக்கு சீமான்

இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்!

இப்படிக்கு சீமான்

இந்து மகா சமுத்திரத்தின் காவல் தெய்வங்கள்!

Published:Updated:
##~##
ஈழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த  தியாகச் செல்வங்களை நினைவுகூரும் நாள் நவம்பர் 27. இந்த வாரத்தை தமிழர் வாழும் இடமெல்லாம் மாவீரர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்!

 அகம், புறம் ஆகிய இரு திணைகளாலும் அமையப்பெற்றதே பழந்தமிழர் வாழ்க்கை. வீரம் செறிந்த தமிழர் வாழ்வு பற்றி புறநானூறு நமக்குக் காட்டுகிறது. எதிரியுடன் நேருக்கு நேர் மோதி போர்க் களத்தில் வீரச் சாவினை அடைந்த மாவீரனை மறக்காமல், அவனது தியாகத்தைப் போற்றிய தமிழர்கள்... அவன் தம்முடன் வாழ்வதாகக் கருதி நினைவுகூர்ந்தார்கள். பழந்தமிழர் வரலாற்றில் காணப்படும் நடுகல் வழக்கம் இதன் பொருட்டுத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிக்கு சீமான்

தொடங்கியதுதான். இதற்காக கல்லைத் தேடி, அதை நன்கு கழுவிச் சுத்தம் செய்து, அதை ஓரிடத்தில் நட்டு, அதற்கு சீரும் சிறப்பும் செய்து, கோயிலாக வழிபடும் பழக்கத்தை நம் பழந்தமிழர் மரபாக அனைத்து இலக்கியங்களிலும் காணலாம்.

இந்த நூற்றாண்டில் மறத் தமிழனின் வீரம் வீறுகொண்டு எழுந்தது ஈழத்திலேதான். அங்கே மாவீரர்கள் இறைவனுக்கு இணையாக வணங்கப் பட்டார்கள். 'துயிலும் இல்லங்கள் ஆலயங்கள்’ என்றே கருதப்பட்டன. இது குறித்து 1986-ம் ஆண்டு 'தி இந்து’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் மேதகு பிரபாகரன், ''தேச விடுதலைப் போரிலே எங்கள் வாழ்வுக்காக, எங்களின் மூச்சுக்காக தம் இன்னுயிரைத் தந்த மாவீரர்களின் நீங்கா நினைவுகளை, எங்கள் நெஞ்சக் கோயிலிலே தீபங்களாய் ஏற்றிவைத்து இருக்கிறோம். தெய்வங்களாய் அவர்களைப் போற்றுதல் செய்கின்றோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னைய எங்களின் வீர யுக நடுகல் வழிபாட்டின் தொடர்ச்சிதான் எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள்!'' என்று எடுத்துரைத்துள்ளார். அந்த மாவீரர்களை நினைவுகூர நவம்பர் 27-ம் நாளை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம், தனது உயிருக்குயிரான நண்பன் சங்கர் ஈழப் போராட்டத்துக்காக உயிரைத் தாரை வார்த்த நாள் அது. 'சங்கர்’ என்று அழைக்கப்பட்ட சத்தியநாதனே விடுதலைப் புலிப் போராளிகளில் மண்ணுக்காக முதன் முதலில் தன்னுயிரை வித்தாக்கியவன். அந்த நாள்... போராளிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும், இன விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தங்களது உள்ளத்தில் வலிமை ஏற்படுத்தித் தரும் நாளாகும்!

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதியானது எம் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வில் ஒரு கறுப்பு நாள். 30 ஆண்டு காலமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்க் கொடையால் நிமிர்ந்து நின்ற ஈழப் போராட்டம்... சிங்களப் பேரினவாத, இந்திய, சீன ஏகாதிபத்திய கூட்டுச் சதியால் வஞ்சகமாய் வீழ்த்தப்பட்டது. களத்தில் நின்ற போராளிகள், எம் தமிழ்ச் சொந்தங்கள், அவர்களின் வாழ்விடங்கள், ஏன் எம் முன்னோர்கள் துயிலும் இல்லங்கள் உட்பட அனைத்தும் சிங்கள இன வெறியர்களால் சிதைத்து அழிக்கப்பட்டன. மண்ணுக்கு அடியில் இருந்து எங்கள் சகோதரர்களின் எலும்புக்கூடுகளைக்கூட கிண்டிக் கிளறி எடுத்து துவம்சம் செய் தார்கள். இறந்தவர்களின் உடலுக்கு பேரினவாதிகளால் எத்தகைய 'மரியாதை’ அளிக்கப்படும் என்பதை, அனுராதபுரம் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட போராளிகளின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி, முழு நிர்வாணமாக குப்பை கூளங்களைப் போல வண்டிகளில் ஏற்றிச் சென்றதை அறிந்த உலகம், மீண்டும் ஒரு முறை அறிந்து அதிர்ந்தது. தமிழர்களது மனங்களில் இருந்து போராளிகள் மற்றும் மக்களின் அர்ப்பணிப்புகளைத் துடைத்து அழித்துவிட வேண்டும் என்பதே நரபலியாளர்களின் நயவஞ்சகத் திட்டமாய் இருந்து வருகிறது.

இப்படிக்கு சீமான்

இப்பொழுது, தமிழர்களது பூர்வீக நிலங்களில் சிங்களவர் களைக் கொண்டுவந்து குடியேற்றுவதன் மூலம் தாங்களே அம்மண்ணின் மைந்தர்கள் என்ற வரலாற்றுத் திரிபை உலகத்துக்கு நிரூபிக்க முயன்றுகொண்டு இருக்கிறது சிங்கள தேசம். தமிழர்களின் ஆட் பலம், ஆயுத பலம் ஆகியவற்றை சிங்கள இனப் பேரினவாதிகளும், இந்திய - சீன அரசுகளும் கூட்டுச் சேர்ந்து அழித்திருக்கலாம். ஆனால், எஞ்சி இருக்கும் தமிழர்களின் மன உறுதியை எந்த ஆயுதத்தைக்கொண்டும் அவர்களால் அழித்தொழிக்க முடியாது. எம் மக்களின் மனங்களில் கனன்றுகொண்டு இருக்கும் விடுதலை நெருப்பை எத்தனை கொடுங்கரங்கள் கொண்டு முயற்சித்தாலும் அணைக்க முடியாது. அந்த மண்ணுக்குள்தான் எங்கள் புனிதமான மாவீரர்கள் உறங்குகிறார்கள். அந்தக் காற்றில்தான் அவர்களுடைய சுவாசம் கலந்திருக்கிறது. அந்த இலை கள் மாவீரர்களின் பெயர்களைச் சொல்லித்தான் சலசலக்கின்றன. காடுகள் அவர்களைத் தேடிக் காத்திருக்கின்றன. நந்திக் கடலில், இந்து மகா சமுத்திரத்தில் இன்னமும் எங்கள் மாவீரர்கள் காவல் தெய்வங்களாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களது ஆன்ம பலத்தைத் துணையாகக்கொண்டு மீண்டும் எழுவோம்; மீண்டு எழுவோம். விடுதலைப் போரில் ஏற்பட்ட பின்னடைவு, தமிழரின் உரிமைக்கான போரின் முடிவாகாது. மறைந்த மாவீரர்கள் தீபங்களாக எரிந்து எமக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். அந்த ஒளியின் வழியே நடந்து செல்வதற்கு இந்த நாள் எங்களுக்கு உறுதுணையாக அமையும்.

''ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல; அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஓர் உன்னத லட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த லட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கிறது. ஓர் இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகிறது.'' என்று உரைத்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் வார்த்தைகள் நினைவில் உள்ளன. இனி வரும் காலம் எமக்கானது!

(வேலூர் சிறையில் இருக்கும் சீமான், தனது வழக்கறிஞரிடம் கூறியதன் எழுத்து வடிவம் இது!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism