Published:Updated:

மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

மோடியை விமர்சித்து சிக்கினார்களா?
பிரீமியம் ஸ்டோரி
மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

மதுரையை அலறவைத்த அல் கொய்தா

மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

மதுரையை அலறவைத்த அல் கொய்தா

Published:Updated:
மோடியை விமர்சித்து சிக்கினார்களா?
பிரீமியம் ஸ்டோரி
மோடியை விமர்சித்து சிக்கினார்களா?
மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

ல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ‘ஸ்லீப்பர்  செல்’ ஆக   செயல்பட்ட  இளைஞர்கள் தமிழகத்தில் சிக்கியிருப்பதும் அவர்களின் ஹிட் லிஸ்ட்டில் பிரதமர் மோடி இருப்பதாகச் சொல்லப்படுவதும் பதற்றத்தை பற்ற வைத்திருக்கிறது.

மதுரையில் 3 பேரையும், சென்னையில் ஒருவரையும் தேசியப் புலனாய்வு ஏஜென்சி (NIA) கைது செய்திருக்கிறது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, “சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது, பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக இதற்கு முன்பு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த முறை அல் கொய்தாவின் ஸ்லீப்பர் செல் ஆட்கள் கைது செய்யப்பட்டிருப்பது கூடுதல் அதிர்ச்சி. இப்போது கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், பிரபல தொழிலதிபர்கள் என சுமார் 25  பேருக்கு குறிவைத்து இருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்தன. இதையடுத்தே என்.ஐ.ஏ நடவடிக்கையில் இறங்கியது” என்றனர்.

ஆக்‌ஷன் பிளான் நடந்தது எப்படி?

“டெல்லி, ஐதராபாத் மற்றும் சில முக்கியப் பகுதிகளில் இருந்து வந்த என்.ஐ.ஏ டீம்களின் அதிகாரிகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ரகசியமாக முகாமிட்டிருந்தனர். தமிழ்நாடு சிறப்பு போலீஸ் டீம் டி.ஐ.ஜி ஈஸ்வர மூர்த்தி, சூப்பிரண்டு அருளரசன் உள்ளிட்ட தமிழக போலீஸார் உதவிகரமாக செயல்பட்டுள்ளனர். கடந்த 25-ம் தேதி அதிகாலைதான், ஸ்லீப்பர் செல் தமிழகத்தில் செயல்பட்டது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவல்கள் உறுதி ஆனவுடன், என்.ஐ.ஏ டீம் அதிகாரிகளும், லோக்கல் போலீஸாரும் பெயின்டர் அப்பாஸ் அலி, கறிக்கடை சம்சுதீன் கரீம் ராஜா, தனியார் நிறுவன மேலாளர் முகமது அயூப் அலி ஆகிய 3 பேரை மதுரையில் கைது செய்தனர். இவர்கள் கொடுத்தத் தகவல்களின் அடிப்படையில், சென்னையில் ஒருவர் பிடிபட்டார்.

மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை ஆபரேஷன் எப்படி நடந்தது?

குறிப்பிட்ட பகுதியில் ஸ்லீப்பர் செல் ஆட்கள் ஒன்றாய் சந்திப்பதும், கூடிப் பேசுவதும், அவர்களின் நடமாட்டமும் முதலில் உறுதி செய்யப்பட்டது. அடுத்த கட்டத் திட்டம் குறித்து அவர்கள் பேசுவதற்காக காத்திருந்தோம். மதுரை ஸ்லீப்பர்ஸ் செல் ஆட்கள், புது ஆட்கள் யாரையும் சந்திக்கவில்லை. 50 கி.மீ முதல் 70 கி.மீ தூரம் வரை பைக்கில் போய் யாருமே இல்லாத தனி இடமாகப் பார்த்து, செல்போனில் பேசி விட்டு வந்தார்கள். தகவலைப் பரிமாற மட்டுமே அவ்வளவு தூரம் போய் வந்தனர். அவர்களைக் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு சந்தேகம் வராதபடி கண்காணித்துக் கொண்டே இருந்தோம். அவர்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் கூடுதல் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் தேவைப்படும் என்பதற்காக வாகனங்களைத் தயார் செய்து, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் பழைய தார்பாய்களைப் போட்டு வாகனங்களை மூடி வைத்திருந்தோம். தொடர்ச்சியாக 48 மணிநேரம் அவர்களைக் கண்காணித்தோம். அவர்களிடம் தாக்குதல் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதை முதல் நாளிலேயே உறுதிசெய்து கொண்டு விட்டோம். அடுத்த நாள் (சனிக்கிழமை) இரவு, அவர்கள் எங்கும் போகவில்லை. குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பின்னரே ஸ்லீப்பர் செல் ஆட்களை மடக்கிப் பிடித்தோம். நாங்கள் அவர்களைச் சுற்றி வளைத்தபோது அவர்கள் எந்தவித எதிர்ப்பும் காட்டவில்லை. அவர்களைப் பிடிப்பதற்காக, பல்வேறு திட்டங்களைப் போட்டோம். அதன்படியே செயல்படுத்தினோம். ஆனால், அவர்கள் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் வைக்காமல், முரண்டு பிடிக்காமல் சிக்கினர். முதற்கட்ட விசாரணையிலேயே பேச ஆரம்பித்து விட்டனர்” என்றார் அவர்களை பிடிக்க உதவிய லோக்கல் போலீஸ் அதிகாரி ஒருவர்.

மதுரையில் என்.ஐ.ஏ டீமிடம் சிக்கிய நபர்கள், விசாரணையின்போது சொன்ன தகவலின் அடிப்படையில்தான், சென்னை பாலவாக்கத்தில் தாவூத் சுலைமான் என்பவர் பிடிபட்டார்.

காலையில் அலுவலகம் செல்வது, மாலையில் வீட்டுக்குத் திரும்புவது என்று மிகவும் இயல்பாகவே அவர் நடமாட்டம் இருந்துள்ளது. அல் கொய்தாவுக்கான தென்னிந்தியத் தலைவர்களின் நேரடித் தொடர்பில் தாவூத் சுலைமான் இருந்துள்ளார் என்கிறார்கள். உளவு பார்க்கவும், நாசவேலையைத் திட்டமிட்டபடி முடிக்கவும், தான் பணியாற்றி வந்த நிறுவனத்தை தாவூத் சுலைமான் மறைமுகமாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார். தென்னிந்தியாவில் மாவட்ட வாரியாக ஆட்களை நியமித்து அவர்களிடம் சில வேலைகளை தாவூத் சுலைமான் கொடுத்து வந்திருக்கிறார். ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இவருடைய பங்களிப்பே அதிகமாக இருந்துள்ளது என்கிறது போலீஸ் வட்டாரம்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் இருந்தும், தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட பகுதிகளின் வரைபடங்கள், ரகசியத் தகவல்கள் அடங்கிய பென்டிரைவ்கள், லேப்டாப்கள் என்று பல பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சென்னையில் சிக்கிய தாவூது சுலைமான், மதுரைக்காரர். இவர் மூலமாக, 30 கோடி ரூபாய் அளவுக்கு 35 சதவிகிதக் கமிஷனுக்கு பழைய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. என்.ஐ.ஏ டீமிடம் பிடிபட்டவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாவூத் சுலைமான், சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு கொண்டு செல்லப்பட்டார். மதுரையில் பிடிபட்டவர்களும் பெங்களூரு கொண்டுசெல்லப்பட்டனர்.

மோடியை விமர்சித்து சிக்கினார்களா?

வலைதளத்தால் சிக்கினார்களா?

ஆயிரம், ஐநூறு ரூபாய் செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடியின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன. சமூக வலைதளங்களில் பிரதமர் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. எச்சரிக்கைக்குப் பிறகும் அவதூறுப் பதிவுகள் தொடர்ந்தன. சிலரின் சமூக வலைதள கணக்குகளைச் சோதித்த வகையில்தான் மதுரையிலும், சென்னையிலும் இவர்கள் சிக்கியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. கேரளாவின் கோழிக்கோடு, கண்ணூர் நகரங்களில், சதித் திட்டம் தீட்டியதாகக் கடந்த அக்டோபர் 1-ம் தேதி சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கத்தில் சுவாலி முகம்மது, அபு பஷீர் சுபுஹானி ஹாஜா மைதீன் ஆகியோரை என்.ஐ.ஏ பிடித்தது. கொட்டிவாக்கத்தில் பிடிபட்டவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இருந்தபடி, சிரியா உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. சித்தூர், நெல்லூர், கொல்லம், மலப்புரம், மைசூர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் தாக்குதல் வேலைக்கு ஆட்களை நியமிக்க, தாவூத் சுலைமான் போட்டிருந்த திட்டமும் இதன்மூலம் இப்போதைக்கு வெளிவந்திருக்கிறது.

- ந.பா.சேதுராமன்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், க.விக்னேஸ்வரன்

கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம்!

பிடிபட்ட தீவிரவாதிகள் பற்றியும், அவர்களின் தொடர்பு குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், “அல்-கொய்தா, லஷ்கர் இ தொய்பா உள்பட ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகளின் ஆட்கள் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. சாதாரணமாக, எல்லோரையும் போலவே இப்போது சிக்கியவர்களும் பெயின்டிங், கோழிக்கடை, மார்கெட்டிங், கம்ப்யூட்டர் வேலை என்று மக்களுடன் மக்களாக இருந்துள்ளனர். இவர்களை மடக்கிய போதுதான், அவர்களின் பர்ஸ்களில் பணத்தைவிட அதிக சிம் கார்டுகள் இருந்தன. ஒருவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. இவர்களின் போனை ஆய்வு செய்ததில் 250 சிம்கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. செல்போன்கள், ஹார்டுடிஸ்க், ஜி.பி.எஸ் கருவிகள், வரைபடங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. ஏகபோக வாழ்வும், அடிக்கடி வெளிமாநிலப் பயணமும் மேற்கொண்டுள்ளனர். பணம் மற்றும் அடிப்படைவாதத்தை வைத்து, பெரும்பாலான இளைஞர்களை மூளைச் சலவை செய்துள்ளனர். இவர்களின் நடவடிக்கைகள் தெரிந்தும் சில போலீஸ் அதிகாரிகள், கண்டும் காணாமல் இருந்துள்ளனர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, மதுரையில் இயங்கும் பயங்கரவாத முகாம்கள் குறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், மதுரைக்குப் புதிய காவல் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள்  நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள்.

அதிர்ந்த என்.ஐ.ஏ!

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்களின் பின்னணியில், மதுரையைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் ஏற்கெனவே மேலிடத்துக்கும், என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வுத் துறைக்கும் ஆதாரங்களுடன் தகவல் அனுப்பி வைத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். மதுரையில் பிடிபட்டவர்கள், உலகம் முழுவதும் இயங்கும் பல்வேறு பயங்கரவாத கும்பல்களுடன் ஸ்லீப்பர் செல் போன்ற நெட்வொர்க்கில் பல இளைஞர்கள் இயங்கி வந்ததை அறிந்து போலீஸார் அதிர்ந்துபோயுள்ளனர்.

- சண்.சரவணக்குமார்

குண்டுவெடித்த இடங்கள்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி குண்டு வெடிப்பு. கேரள மாநிலம் கொல்லம் தலைமை ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட் வளாகத்தில் ஜூன் 15-ம் தேதியும், கர்நாடகாவின் மைசூரு கோர்ட் வளாகத்தில் ஆகஸ்டு 1-ம் தேதியும் குண்டுகள் வெடித்தன. நெல்லூரில் செப்டம்பர் 12 அன்றும், மலப்புரம் ஜுடிஷியல் கோர்ட் வளாக கழிவறையில், கடந்த மாதம் 1-ம் தேதியும் குண்டு வெடிப்புகள் நடந்தன. நெல்லூர், மலப்புரம் கோர்ட் வளாக குண்டு வெடிப்புகளின்போது, அங்கு ஏராளமான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. சில பென்டிரைவ்களும் கண்டெடுக்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism