Published:Updated:

தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக சிக்கிய `தேசபக்தர்’

தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக  சிக்கிய `தேசபக்தர்’
பிரீமியம் ஸ்டோரி

பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ அறிவிப்பை விமர்சித்தவர்களையும், பொதுமக்களையும் அநாகரிகமான வார்த்தைகளால் முகநூலில் வசைபாடிய பி.ஜே.பி நிர்வாகி ஒருவரே, கணக்கில் வராத புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் போலீஸில் சிக்கிய விநோதம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

“தேச வளர்ச்சிக்காக வரிசையில் நிற்போம்’’ என்று தன் முகநூல் பக்கத்தில் இலவசமாக ‘கருத்துகள்’ சொல்லிக்கொண்டிருந்த அந்த நபரின் பெயர் ஜெ.வி.ஆர்.அருண். 

பி.ஜே.பி-யின் சேலம் கோட்ட இளைஞர் அணிச் செயலாளரான இவர்...

தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக  சிக்கிய `தேசபக்தர்’

‘‘பணம் மாற்ற வருகிறவர்களுக்கு மை வைக்கப்படும் என அறிவித்ததும், நாங்கள் எல்லாம் யோக்கியன்கள் என்றீர்களே... அப்புறம் எப்படிடா இப்ப கூட்டம் குறைந்தது?’’

‘‘100 ரூபாய் கொடுத்து வங்கி கணக்கு தொடங்க மக்களிடம் வங்கி ஊழியர்கள் கெஞ்சிய நிலையில், 49,000 ரூபாய் கொடுத்து புதிய கணக்குத் தொடங்க பல விண்ணப்பங்கள் வருகிறதாம். எல்லாப் புகழும் மோடிக்கே!”

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு, செய்வதறியாது மக்கள் தவித்துக்கொண்டிருந்த சமயத்தில், இப்படியெல்லாம் பதிவுகள் வெளியிட்டு வந்தார் அருண். தன்னை ஒரு ‘தேசபக்தர்’ என்று அருண் கூறிக்கொண்டிருந்தார்.

சேலத்துக்குக் கடந்த ஆண்டு நயன்தாரா வந்திருந்தபோது திரண்ட மக்கள் கூட்டத்தின் புகைப்படத்தை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “நயன்தாராவிடம் 500, 1,000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்காகக் கூடிய கூட்டம்” என மக்களை இழிவாக சித்தரித்து பதிவு வெளியிட்டார்.

இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி இரவு, சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது, கணக்கில் வராத 20.55 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார். அவர் வேறு யாருமல்ல, ‘தேசபக்தர்’ ஜெ.வி.ஆர்.அருண்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக  சிக்கிய `தேசபக்தர்’

அருணிடம் இருந்த பணத்தில் 18 லட்சம் ரூபாய்க்குப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்தப் பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லாததால், வருமானவரித் துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, பணத்தை மாவட்ட கருவூலத்தில் போலீஸார் சேர்த்துவிட்டனர். சேலம், பெரமனூர் நாரயணசாமிப் பிள்ளை சாலையில் உள்ள அருணுடைய வீட்டை சோதனையிட்ட வருமானவரித் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அருணின் பின்புலம் குறித்து நாம் விசாரித்தபோது, இதற்கு முன்பு இவர் பா.ம.க-வின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்ததும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவிதமாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

பா.ம.க-வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அருள், “அருணுடைய நடவடிக்கைகள் கட்சிக்கு எதிரானதாக இருந்தன. பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்வதாகத் தகவல்கள் வந்தன. எனவே, அவரைக் கட்சியிலிருந்து நீக்கினோம்’’ என்றார்.

தேசத்துக்காகக் கஷ்டத்தப் பொறுத்துக்க மாட்டீங்களாடா! - வசமாக  சிக்கிய `தேசபக்தர்’

பா.ம.க-வில் இருந்து வெளியேறியவுடன் பி.ஜே.பி-யில் இணைந்தார் அருண். அவருக்கு பி.ஜே.பி-யில் சேலம் கோட்ட இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் அருணுக்கு, சேலத்தில்  திருமண மண்டபம் இருக்கிறது. அருணுக்கு வங்கி அதிகாரிகள் சிலரின் நட்பு  இருக்கிறது என்றும், அதைப் பயன்படுத்தி 30 சதவிகித கமிஷனில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முறைகேடாக மாற்றிய பணத்தை எடுத்துக்கொண்டு வரும் வழியில்தான், போலீஸிடம் அவர் சிக்கிக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். 18 லட்சம் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் சீரியல் எண்களை வைத்து அது எந்த வங்கிக்கு வழங்கப்பட்ட நோட்டுகள் என்பதை வருமான வரித்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

அருணுடைய கருத்தைக் கேட்பதற்காக அவரை நாம் தொடர்புகொண்ட போது, ‘‘வருமானவரித் துறையினரிடம் பதில் சொல்லிவிட்டேன். அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது’’ என முடித்துக்கொண்டார்.

இந்த விவகாரத்துக்குப் பிறகு, ‘தேசபக்தர்’ அருண், பி.ஜே.பி-யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism