Published:Updated:

கறுப்பு அழியுமா? ஹவாலா ஒழியுமா?

கறுப்பு  அழியுமா? ஹவாலா ஒழியுமா?
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு அழியுமா? ஹவாலா ஒழியுமா?

அலசுகிறார்கள் அனுபவஸ்தர்கள்

கறுப்பு அழியுமா? ஹவாலா ஒழியுமா?

அலசுகிறார்கள் அனுபவஸ்தர்கள்

Published:Updated:
கறுப்பு  அழியுமா? ஹவாலா ஒழியுமா?
பிரீமியம் ஸ்டோரி
கறுப்பு அழியுமா? ஹவாலா ஒழியுமா?

‘மோடியின் அறிவிப்பால், கறுப்புப் பணம் குப்பையாகிப் போனது’, ‘இனி ஹவாலா மோசடி நடக்காது’ எனத் திரும்பிய பக்கமெல்லாம் செய்தி வாசிக்கிறார்கள் பி.ஜே.பி-யினர்!

‘உண்மையில், கறுப்புப் பணம் - ஹவாலா பணம் என்றால் என்ன? அதனை எப்படிப் பதுக்குகிறார்கள், ஏன் பதுக்குகிறார்கள்?’ என்பது போன்ற கேள்விகளை, உரிமை விழிப்பு உணர்வு அமைப்பின் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமான எஸ்.ஜாகீர் உசேன் முன்பாக வைத்தோம்.

கறுப்பு  அழியுமா? ஹவாலா ஒழியுமா?

“குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு அரசுக்கு வரி செலுத்தவேண்டும். ஆனால், கோடிகளில் வருமானம் பார்க்கும் பண முதலைகளோ தங்களது பணத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த மனமில்லாமல், மொத்தப் பணத்தையும் பதுக்க ஆரம்பிக்கிறார்கள். இதுதான் கறுப்புப் பணம். அரசியல்வாதிகள் மற்றும் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகார வர்க்கங்கள் ஊழல் மற்றும் லஞ்சம் மூலமாக கோடிக்கணக்கில் குவித்து வைத்திருக்கும் பணத்தை அரசிடம் கணக்கு காட்டமுடியாது. இதுவும் கறுப்புப் பணம்தான். உதாரணத்துக்கு, 100 ரூபாய் சினிமா டிக்கெட்டை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதிக் கிறார்கள். இதில், 1,900 ரூபாயும் கறுப்புப் பணம்தான். கல்வி நிறுவனங்களில் நன்கொடை என்ற பெயரில் கோடிக் கணக்கில் வசூலிக்கப்படும் அத்தனையும் கறுப்புப் பணம்தான். மத அறக்கட்டளை களிலும் அன்பளிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கானப் பணம் கொட்டப் படுகிறது.

இந்தக் கறுப்புப் பணத்தை உள்நாட்டில் வைத்திருப்பது ஆபத்து என்பதால், அதனை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். இதைத்தான் ஹவாலா மோசடி என்கிறோம். வெளிநாட்டுக் கம்பெனியிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயார் செய்துகொள்வார்கள். பின்னர், அந்தக் கம்பெனிக்கு இங்குள்ள கறுப்புப் பணத்தை வங்கி மூலமாக அனுப்பி வைப்பார்கள். அந்த வெளிநாட்டு கம்பெனியும் போலியானதாகவே இருக்கும். இந்த முறையில் வெளிநாட்டுக்கு சென்ற பணம், அங்குள்ள வங்கிகளிலோ அல்லது தொழில் முதலீடாகவோ பத்திரப் படுத்தப்படும். தேவைப்பட்டால், அதே பணம் மீண்டும் இந்தியாவுக்கே ‘வெள்ளை’யாக வந்துசேரும். கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 4,400 கோடி ரூபாய் பணம் இந்த வழியில் வெளிநாடுகளுக்குப் போயிருக்கிறது.

 தங்க நகைக் கடைகளில், கறுப்புப் பணத்தைக் கொடுத்து நகையாக வாங்கிக்கொள்வார்கள். இதற்கான பில் விவரத்தில், வாடிக்கையாளர் பழைய நகையைக் கொடுத்து புதிய நகைப் பெற்றுக்கொண்டதாக நகைக் கடையினரும் எழுதிக் கொடுத்து விடுவார்கள். அடுத்ததாக, ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்த வரையில், கறுப்புப் பணத்துக்கு ஈடாக நில விற்பனை நடந்ததாகவோ அல்லது முன்பணம் கொடுத்ததாகவோ ஒப்பந்தம் தயார் செய்துகொள்வார்கள். உண்மையில், அப்படி ஒரு ஒப்பந்தமே நடைபெற்றிருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கறுப்பு  அழியுமா? ஹவாலா ஒழியுமா?

1978-ல் இதேபோன்று 5,000 ரூபாயைத் தடை செய்தார்கள். அன்றைய காலகட்டத்தில் அது பணக்காரர்களிடம் மட்டுமே புழங்கிவந்த நோட்டு. எனவே அது கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் என்றால்கூட நம்பலாம். ஆனால், இன்றைக்கு 500, 1,000 ரூபாய் சாதாரண மாக நடுத்தரத்தட்டு மக்களால் பயன்படுத்தக்கூடிய ரூபாய்கள். இதனைத் தடை செய்வதால் எப்படி கறுப்புப் பணத்தை தடை செய்ய முடியும்? கறுப்புப் பணம் உற்பத்தி யாகிற ஓட்டைகளை அடைப்பது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வு’’ என்றார் ஜாகீர் உசேன்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஹவாலா மோசடி போன்றவை குறித்து, கலால் மற்றும் சுங்கத்துறை முன்னாள் இணை ஆணையர் உதயகுமாரிடம் பேசியபோது, “தங்க வர்த்தகம் மூலமாக கறுப்புப் பணத்தை மாற்றிக்கொள்வது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ததாகப் போலி ஆவணம் தயார் செய்து கறுப்புப் பணத்தை மாற்றிக்கொள்வது என்பதெல்லாம் பழைய சங்கதி. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், திட்டத்தை செயல்படுத்தியதில்தான் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம். முதலில் 500 ரூபாயை புழக்கத்தில் விட்டிருந்தால், இந்த அளவுக்குப் பிரச்னைகள் இருந்திருக்காது. இதுவரையிலும் 6 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ.-களுக்குச் செல்லும் நிதி ஆதாரத்தை தடை செய்துவிட்டதால், காஷ்மீரில் பந்த், கல்லெறிதல் உள்ளிட்ட பிரச்னைகள் இல்லாமல் அமைதி நிலவுகிறது. கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட்டு வந்த பாகிஸ்தான் இப்போது திகைத்து நிற்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 100 கோடி ரூபாய் அளவில் நடந்துவந்த ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் இப்போது முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளதன. சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்... ஹவாலா இனி ஒழிந்தே போகும்!’’ என்றார்.

நல்லது நடந்தால் சரி!

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism