Published:Updated:

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”
பிரீமியம் ஸ்டோரி
“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

களம் இறங்கும் கௌதமி

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

களம் இறங்கும் கௌதமி

Published:Updated:
“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”
பிரீமியம் ஸ்டோரி
“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”
“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

‘‘முதல்வராக இருந்த ஜெயலலிதா, எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’’ என அப்போலோ பிரதாப் ரெட்டி கூறிவந்த நிலையில், அவரது திடீர் மரணம் தமிழக மக்களிடையே பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதில்கேட்டு நடிகை கௌதமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், ‘‘முதல்வர் தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையின் 2-வது தளத்துக்குள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நேரில் சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. மக்கள் பிரதிநிதியான ஒருவரின் உடல்நிலை குறித்து ஏன் இவ்வளவு ரகசியம் காக்கப்பட்டது? அவரது சிகிச்சை குறித்து உடனிருந்து முடிவுகளை எடுத்தது யார்? ஏன் இறுதிவரை அவரது உடல்நிலை குறித்து எதுவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலே இருந்தது? மக்கள் பிரதிநிதியான ஒரு முதல்வரின் பாதுகாப்புக்கே இந்த நிலை என்றால், பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” எனக் கேட்டிருந்தார். கௌதமி ஏற்கெனவே பி.ஜே.பி இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர். இந்தக் கடிதம் தொடர்பாக அவரிடம் பேசினோம்.

‘‘ஜெயலலிதா மரணம் குறித்து உங்களுக்கு என்ன சந்தேகம்?’’

“அவருடைய இறப்பில் பிரச்னை இருக்கிறதா, இல்லையா என்பதை உணர்வதற்கான தகவல்கூட யாருக்கும் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியும் இதுதான். மக்களின் கேள்வியைத்தான் பிரதமருக்குக் கடிதமாக எழுதினேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

‘ஜெ. உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில், ஜெ.வுக்கு நெருக்கமானவர்களும், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் சகஜமாக நின்றபோது, நீங்கள் உடைந்து அழுதுவிட்டீர்களே?’’

“அது திடீர் அழுகை அல்ல. ஜெயலலிதா  நலமாகிவிட்டார் என்றும், எப்போது வேண்டுமானாலும் அவர் வீட்டுக்குத் திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றும் 4-ம் தேதி மதியம் வரை எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென இதய முடக்கம் ஏற்பட்டதாகச் செய்தி வந்தது. பிறகு, கண்மூடி கண் திறக்கும் நொடியில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. அந்த கம்பீரம், காந்த ஈர்ப்பு என தனிப்பட்ட முறையில் நான் வியந்து பார்த்த ஒரு பெண், இனிமேல் உயிருடன் இல்லை என்ற செய்தியைக் கேட்டதில் இருந்தே நான் உடைந்துதான் போயிருந்தேன்.’’

‘‘ஜெயலலிதாவை நீங்கள், சந்தித்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?’’

“முதல்வரை சிலமுறைதான் சந்தித்து இருக்கிறேன்.  சில நிமிடங்கள்தான் பேசியுள்ளோம். 2016-ல், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன். ஆனால், ஒரு தமிழகத்தின் பிரஜையாக மற்ற எல்லோரும் ஜெ-வுடன் தங்களை எப்படித் தொடர்புபடுத்திக் கொண்டார்களோ, அப்படித்தான் எனக்கும் அவருக்குமான தொடர்பு. எனது  இந்தக் கடிதம்கூட அந்தக் காரணத்தால்தான்.’’

‘‘ ‘விஸ்வரூபம்’ பிரச்னையின்போது, ஜெயலலிதாவுடன் நீங்கள் முரண்பட்ட கருத்தில் இருந்தீர்களே?’’

“நான் மட்டுமல்ல... பலரும் அவருடன் அப்போது முரண்பட்ட கருத்தில்தான் இருந்தார்கள். ஆனால், அதுவேறு. முதல்வர் பதவியில் இருப்பவர் எப்படி இறந்தார் என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில், அது பற்றி கேள்விகேட்பது ஒரு குடிமகளாக என் கடமை”.

‘‘நீங்கள் மோடியை ஒரு மாதத்துக்கு முன்பு சந்தித்தீர்கள். தற்போது மீண்டும் அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்களே?’’

“அந்த சந்திப்புக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரைச் சந்தித்தபோது இப்படியான சூழல் எழும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அடுத்த வருடம் யோகா தொடர்பான ஒரு நிகழ்வைத் தொடங்க, சென்ற வருடமே திட்டமிட்டிருந்தேன். அதற்காகத்தான், அக்டோபர் மாதம் மோடியைச் சந்தித்தேன். அவரும் எனக்கு அந்த நிகழ்வு தொடர்பாக உதவுகிறேன் எனச் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான்”.

“சசிகலாவிடம் இருந்து பதில் கிடைக்குமா?”

‘‘பி.ஜே.பி-யில் மீண்டும் இணையும் திட்டம் இருக்கிறதா?’’

“நான் பி.ஜே.பி இளைஞர் அணியில் இருந்தது ஒருகாலம். பி.ஜே.பி-யில் இணையும் யோசனையுடன் தற்போது நான் எதையும் செய்யவில்லை. அதுவும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கும்போது, அதைக் காரணமாகவைத்து அப்படிச் செய்யமாட்டேன்.’’

‘‘உங்கள் கடிதத்துக்கு மோடியிடமிருந்தோ, சசிகலா தரப்பிடமிருந்தோ என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?’’

“என்னுடைய கேள்விக்கு நிச்சயம் பிரதமரிடமிருந்து பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதேபோல சசிகலாவிடம் இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால், கிடைக்குமா?”

- ஐஷ்வர்யா
படம்: மீ.நிவேதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism