Published:Updated:

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்
பிரீமியம் ஸ்டோரி
யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

Published:Updated:
யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்
பிரீமியம் ஸ்டோரி
யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்தி வரும் ரெய்டுகள் தான் ஆளும்கட்சியை அச்சுறுத்த ஆரம்பித்து உள்ளன. இவர்கள் மூவரும் சிக்கியதன் மூலம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள் சிலர். கையிருப்பில் இருந்த கறுப்புப் பணத்துக்கு ஒட்டுமொத்த தங்கத்தையும் வாங்கிக் குவிக்க எண்ணியதன் விளைவால், வருமான வரித்துறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி. “இப்படியொரு நிலைக்கு அவர் தள்ளப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம்குமார்” என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

யார் இந்த பிரேம்?

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

“சென்னையை பூர்வீகமாகக் கொண்ட பிரேம்குமார் 1995-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் தோற்றுப்போன பிரேம், போலி சான்றிதழ் மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்திருந்தார். அவர் படித்த புரசைவாக்கம் பள்ளியின் தலைமை ஆசிரியர் இதைக் கண்டுபிடித்துவிட்டார். இந்த விவகாரத்தைப் பல்கலைக்கழகத்தின் கவனத்துக்குக் கொண்டு போனால் திசை திருப்பிவிடுவார்கள் என்பதால், காவல்துறையில் புகார் கொடுத்தார் ஆசிரியர். அப்போது தி.மு.க-வில் கோலோச்சிய அண்ணா நகர் பிரமுகர் உள்பட சிலர் மூலம் வழக்கில் இருந்து விடுபட்டுவிட்டாலும் கல்லூரிப் படிப்பை பிரேமால் நிறைவு செய்ய முடியவில்லை. இதன்பிறகு, பெங்களூருவில் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அங்கும் ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோக... அந்த வழக்கில் இருந்தும் சிரமப்பட்டு வெளியே வந்தார் பிரேம். இதன்பிறகு, தங்கத்தில் கால்பதிக்க ஆரம்பித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது அமைச்சர் விஜய பாஸ்கர் நட்பு ஏற்பட்டது.  பிற்காலத்தில் சேகர் ரெட்டியின் தொடர்புகள், ஆளுங்கட்சி அமைச்சர்களின் நட்பு என அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தார். இப்போதும்கூட சேகர் ரெட்டியின் உறவினர் பிரேம் என்றுதான் தகவல் பரப்புகிறார்கள். இது தவறானது. பிரேம் குமாரின் முக்கிய வேலையே, கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றித் தருவதுதான். சிங்கப்பூரில் இருந்து தங்கத்தைக்கொண்டு வருவதில் கைதேர்ந்தவர்” என்கின்றனர் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.

“தொடக்க காலத்தில், வெங்கடேஸ்வரா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தோடு சேர்ந்து நகைத் தொழிலில் இறங்கினார். அந்த நகைக்கடையில் பிரச்னை ஏற்பட்டதால், ஏ.வி.கே ஜுவல்லர்ஸுடன் இணைந்தார். அவர்களுடனும் பிரச்னை ஏற்பட்டதால், கோல்டு வாங்கிக் கொடுக்கும் வேலையில் இறங்கினார். கைக்கு மேல் பணம் என வர்த்தகம் எளிதாக இருந்ததால், ஆளும் கட்சி புள்ளிகளை வளைத்துப் போட ஆரம்பித்தார். பாரிமுனையில் பத்மா கேஸ் ஏஜென்சி என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ஏராளமாகச்  ரூபாய்களை சம்பாதித்தார். ‘இருக்கும் பணம்போதும். இன்னும் ஏன் பணம் பணம்னு அலையணும்’ என அவர் அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார் பிரேம். அவருடைய சொத்து மதிப்பு 200 கோடியைத் தாண்டிவிட்டது. அவருடைய திருநின்றவூர் பண்ணை வீட்டையும் வங்கி லாக்கர்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை. கடந்த ஆட்சியில் ‘கோலோச்சிய’ முன்னாள் பெண் அமைச்சர் ஒருவர் முதல்முறையாக கீழ்பாக்கத்தில் உள்ள பிரேம் வீட்டுக்கு வந்தபோது, பிரமாண்டமான விருந்து மேளாவே நடத்தியதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் மறக்கவில்லை. அந்தப் பெண் அமைச்சர் வாங்கிக் குவித்த தங்கம் எல்லாம், சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட தங்கத்துக்கும் மேல். கீழ்பாக்கத்தைச் சுற்றியும் பல பிளாட்டுகளை வாங்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்துவிட்டார். தங்கத்துக்கு அடுத்தபடியாக, அவருடைய மிக முக்கியமான வேலை மெடிக்கல் சீட் வாங்கித் தருவதுதான். சேகர் ரெட்டியோடு பிரேம் பிடிபட்டதோடு மட்டுமல்லாமல், இவர்களிடம் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆளும் கட்சி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் வருமான வரித்துறையின் சோதனைக்குள் கொண்டுவர வேண்டும்” என்கின்றனர் பிரேம் குமாரின் கடந்த காலத்தை அறிந்தவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் இந்த பிரேம்? - ஐ.டி வலையில் கார்டன் விசுவாசிகள்

பிரேம் குமார் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அறிவதற்காக அவரைத் தொடர்பு கொண்டோம். “இப்போது நான் பேசும் நிலைமையில் இல்லை. விரைவில் உங்களிடம் பேசுகிறேன்” என்றதோடு முடித்துக்கொண்டார். 

அவர் விளக்கம்தர முன்வந்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

- ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism