‘போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல் போனதா?’- ஸ்டாலினை சீண்டும் தமிழிசை

மீண்டும் சட்டமன்றம் செல்வோம் என ஸ்டாலின்  அறிவித்துள்ளதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை  சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டெர்லைட்  ஆலையை மூட அதிமுக அரசு அமைச்சரவையைக் கூட்டாமல் தணியாக அரசாணை பிறபித்துள்ளதால் அதற்கு எளிதில் மறுப்பு  வாங்கி விட முடியும், எனவே அமைச்சரவையைக்கூட்டி  அரசாணை வெளியிட வேண்டும் எனக் கடந்த மே 29-ம் தேதி நடந்த  சட்டமன்ற கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  கோரிக்கை விடுத்தார். மேலும் முதல்வர் பதவி விலகும் வரை  சட்டமன்றத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் திமுக பங்கேற்காது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அண்ணா  அறிவாலயத்தில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் அமைத்தார்.  இந்நிலையில் நேற்று நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள்  கூட்டத்துக்குப் பிறகு பேசிய ஸ்டாலின் வரும் திங்கள் கிழமை  முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக பங்கேற்கும் எனக்  கூறியிருந்தார். 

ஸ்டாலினின் இந்த முடிவு குறித்து தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போட்டி சட்டமன்றத்தில்  கூட முதல்வராக முடியாத ஸ்டாலின், முதல்வரைப் பதவி  இறக்காமல் நுழையமாட்டேன் என்ற சவாலைக்கைவிட்டு மீண்டும்  நாளை ஜனநாயக கடமை ஆற்றச் செல்வதாக சொல்வது ஏன்?  போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல்  போனதாதல் தானே? தொடர்ந்து வெளிநடப்பு வழிநடத்தும்  தலைவராக பணியாற்றுக.”எனக் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!