Published:Updated:

வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?

வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?
பிரீமியம் ஸ்டோரி
News
வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?

வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?

வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?

‘வர்தா’ புயல் கடந்த 12-ம் தேதி சென்னையைத் தாக்கியது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னையின் இயல்பு வாழ்க்கை சுத்தமாக முடங்கியது. மாநகரின் அனைத்துச் சாலைகளும் ‘வர்தா’ புயல் பிய்த்துப் போட்ட பெரு மரங்களால் நிரம்பிக் கிடக்கின்றன.

மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என்று பல்வேறு குழுக்கள் அடியோடு பெயர்ந்து கிடக்கும் மரங்களை இரவு பகலாக அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், அந்தந்தப் பகுதி தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களுக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் வரவில்லை. சென்னைக்குள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய ‘வர்தா’ புயல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அங்கு பெரிய அளவுக்குப் பாதிப்புகள் இல்லை. புயலின் தாக்கம் தொடங்கியது முதல் துணை ராணுவப் படையும், தமிழகக் காவல் துறையும் அதிரடியாகச் செயல்பட்டு, கடல் நீர் சமாதியின் உள்ளே வந்துவிடாமல் தடுத்துள்ளனர். இதில், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

‘‘புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாளில் இருந்தே நாங்கள் விழிப்பாக இருந்தோம். வானிலை மைய அதிகாரிகளோடு அவ்வப்போது தொடர்புகொண்டு புயலின் தடம் குறித்து தெரிந்துகொண்டோம். 12-ம் தேதி காலையில், முன்பே திட்டமிட்டபடி துணை ராணுவம், ஆயுதப் படைப்பிரிவு போலீஸார், தீயணைப்புப் படையினர் கொண்ட குழு, புயலை சமாளிக்க தயார் நிலையில் இருந்தது. மறைந்த முதல்வரின் சமாதியின் மேற்கூரை புயலால் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க வலுவான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வர்தா... ஜெயலலிதா! - சமாதி என்ன ஆனது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடல் நீர் உள்ளே புகுந்துவிடாமல் இருக்க நூற்றுக்கணக்கிலான மணல் மூட்டைகள் சமாதியின் நான்குபுறமும் அடுக்கப்பட்டன. இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் வராமல் பார்த்துக்கொண்டோம். இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் அந்தப் பணி முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

புயலின் தாக்கம் இருந்த அன்று, பொதுமக்கள் யாரும் சமாதியின் உள்ளே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. 13-ம் தேதி காலை முதல் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர். அஞ்சலி செலுத்தவரும் மக்களுக்கு அ.தி.மு.க சார்பில் இலவச உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

- சி.தேவராஜன்
படங்கள்: சு.குமரேசன்