Published:Updated:

மதுரையில் சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)

மதுரையில்  சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)
மதுரையில் சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)

மதுரை : மதுரையில் ஜனதா கட்சி அலுவலகத்தையும், சுப்ரமணியன் சுவாமி வீட்டையும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வருமான வரி அலுவலகம் அருகில் ஜனதாகட்சி அலுவலகமும், சுப்ரமணியன் சுவாமி வீடும் உள்ளது.

மதுரையில்  சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)

இன்று காலை 11 மணி அளவில் 4 இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், அலுவலகம், வீடு மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மதுரையில்  சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)

மேலும், அங்கிருந்த கொடி கம்பத்தில் இருந்த கட்சி கொடியை இறக்கி அறுத்து வீசியதுடன், கட்சி பலகையை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதையடுத்து அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரையில்  சுப்ரமணியன் சுவாமி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! (படங்கள்)


 

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ள மாவட்ட ஜனதா கட்சித் தலைவர் சசிகுமார், தமிழர்களுக்கு தனி மாநிலம் கேட்பதற்காகத்தான் ராஜபக்சேவை சுப்ரமணியன் சுவாமி சந்தித்தார். தமிழர்களுக்கு துரோகம் செய்வதற்கு அல்ல என்றார்.

தமிழுக்காக உழைப்பதாக சொல்லிக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்றும் இதை கண்டித்து நாங்கள் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றும் சசிகுமார் கூறினார்.

ராஜபக்சேவை சந்தித்தது காரணமா?

ஆரம்ப காலம் முதலே தனித் தமிழீழத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருபவர் சுப்ரமணியன் சுவாமி. இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு  பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறி வந்த சுப்ரமணியன் சுவாமி, அண்மையில் இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்து வருகிற நிலையில், சுப்ரமணியன் சுவாமி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தது  தமிழ் இன உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, மேற்கண்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



-
கே.கே.மகேஷ்,

படங்கள்: பா.காளிமுத்து