Published:Updated:

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

மிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரை அடக்கம் செய்த இடத்தில் இன்னும் ஈரம் காயவில்லை. அதற்குள், ஜெயலலிதா நிரந்தரப் பொதுச் செயலாளராக வீற்றிருந்த நாற்காலி, சசிகலாவுக்குப் பக்கத்தில் போய்விட்டது. தமிழக முதல்வர் என்ற அதிகாரம்மிக்க பதவி ஓ.பன்னீர்செல்வத்திடம் போய், பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. ஆனால், ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில், இன்னும் மயான அமைதி நீடிக்கிறது. 

ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களான அவரது அண்ணன் பிள்ளைகள் தீபாவும், தீபக்கும் அத்தையின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடி இன்னும் குரலை உயர்த்தவில்லை. ‘தன் உடன்பிறவாச் சகோதரியின் சொத்துக்கள் யாருக்கு’ என்று சசிகலாவும் இன்னும் வாய் திறக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில், சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலையில் உள்ளது. அந்தத் தீர்ப்பு வந்தபிறகு, ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும் என்பது பற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தோம்.

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பினாமி சொத்துக்கள் என்றால் என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா, “ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும், சசிகலா, இளவரசி ஆகியோர், தங்களின்  வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்கள் எல்லாமே ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி பார்த்தால், சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் போக, 1996-க்குப் பிறகு சசிகலா, இளவரசி, சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர் டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் பெயர்களில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் ஜெயலலிதாவின் ‘பினாமி’ சொத்துக்கள் என்றுதான் கருத முடியுமாம். குன்ஹாவின் இந்தக் கருத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பலரும் புதிய சொத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். அவற்றை இயக்கும் சக்திகளாகவும் அவர்களே இருக்கின்றனர். அவற்றை எல்லாம், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று கருதினால், அந்தச் சொத்துக்களின் நிலை என்ன? அவற்றின் மூலம் லாபம் அடையப்போவது யார்? அல்லது ‘பினாமி’ சொத்துக்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகுமா? என்ற கேள்விகளை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த விளக்கம்...

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம்!

“பினாமி சொத்துக்கள் பரிவர்த்தனைத் தடைச் சட்டம், 1988-ல் கொண்டு வரப்பட்டது. பினாமி பரிவர்த்தனையை முழுவதுமாகத் தடை செய்ய அந்தச் சட்டம் வழிவகுத்தது. அதன் சாரம் என்னவென்றால், ‘ஒரு சொத்து யார் பெயரில் இருக்கிறதோ, அவர்தான் அந்தச் சொத்தின் உரிமையாளர். அதை மாற்றி, அந்தச் சொத்துக்கு வேறொருவர், தான் தான் உரிமையாளர் என்று உரிமை கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியாது. மேலும், பினாமி பெயரில் வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு இருப்பதாகச் சொல்வது குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால், அந்தச் சட்டத்தில், பினாமி சொத்தைப் பறிமுதல் செய்வது பற்றியோ, தண்டனை வழங்கும் நடைமுறை பற்றியோ எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. 

இந்தக் குறைபாட்டை களைவதற்காக, 2016-ம் ஆண்டு, இந்தச் சட்டத்தில், மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்து அமல்படுத்தியது. புதிய திருத்தங்களின்படி, பினாமி சொத்துப் பரிவர்த்தனைகளை விசாரிக்க, ‘விசாரணை அதிகாரி’ என்பவருக்கு அதிகாரம் உள்ளது. அந்த விசாரணை அதிகாரி, புகாரைப் பெற்றோ அல்லது சுயமாகவோ விசாரணையைத் தொடங்கலாம். பதிவு அலுவலகங்கள், கம்பெனிகள் பதிவாளர் மற்றும் உரிய நபர்களிடம் இருந்து ஆவணங்களைப் பெறுவதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் பினாமி சொத்து என்று தெரியவந்தால், அந்தச் சொத்தை ஜப்தி செய்து, நீதி விசாரணை அதிகாரியிடம் (Adjudicating Authority) அறிக்கை சமர்பிப்பார். அந்த நீதி விசாரணை அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து, பிரச்னைக்குரிய சொத்துக்கள், பினாமி சொத்துகள்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைப்பார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒருவர் மரணம் அடைந்த பிறகும், அவர் வாரிசுகள் மீதும் பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் நடவடிக்கை பாய சட்டம் வழி செய்கிறது. நீதி விசாரணை அதிகாரியின் நடவடிக்கையை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள், மேல்முறையீடு செய்வதற்கு, ‘மேல்முறையீடு தீர்ப்பாயம்’ உள்ளது.

ஜெ. சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?

பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் - விதிவிலக்குகள்!

இந்துக் கூட்டுக்குடும்பத்தின் சார்பாக, குடும்பத் தலைவர் ஒரு சொத்தை வைத்திருப்பது, கணக்கில் காட்டப்பட்ட வருமானம் மூலம், மனைவி பெயரில் கணவன் (அ) கணவன் பெயரில் மனைவி சொத்துக்கள் வாங்கி வைத்திருப்பது, பிள்ளைகள் பெயரில் ஒருவர் சொத்துக்கள் வாங்குவது விதிவிலக்குகள். அதேபோல, சகோதரன், சகோதரிகளுடன் கூட்டாக சொத்துக்கள் வாங்கலாம். இந்தச் சொத்துக்கள், பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் குற்ற நடவடிக்கையாக கருதப்படாது. இப்படி வாங்கப்படும் சொத்துக்கள் பினாமி சொத்துக்களாக கருதப்படாது.

உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்கில் உள்ள சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்கள் என்று அறிவிக்கப்பட்டு, இந்தச் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படலாம். நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை என்றால், அந்தச் சொத்தின் உரிமையாளர்கள் எவரோ, அவர்களே அதை அனுபவிப்பார்கள்.  ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள், அதில்  உரிமை கொண்டாட முடியாது’’ என்றார்.   

- ஜோ.ஸ்டாலின்

புதிய சொத்துக்கள்!

சசிகலா, இளவரசி அன் கோ-விடம் சேர்ந்த புதிய சொத்துக்களில் சில...

1.
ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்: சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, இளவரசி மற்றொரு ‘சேர் பெர்சன்’ ஆகி உள்ளார். அன்றுதான், இந்த நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் சி.இ.ஓ இளவரசியின் மகன் விவேக்.

2. சந்தனா எஸ்டேட்ஸ்: ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நிறுவனம். இயக்குநர்கள்-டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன்.

3.
ரெயின்போ ஏர்: 2009-ல் தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனம். பங்குதாரர்கள்- வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன்.

4. லைஃப் மெட்: கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இயக்குநர்கள் - திருநாராயணன், அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார்.

5. மேவிஸ் சாட்காம்: 1998-ல் தொடங்கப்பட்டது. தற்போது, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு இயக்குநர்களாக உள்ளனர். பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர். இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா டி.வி’ செயல்படுகிறது.

6.
கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்: 2002-ல் தொடங்கப்பட்டது. பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் உள்ளிட்ட ஊடகங்களைத் தொடங்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர்கள்-இளவரசியின் மகள் பிரியாவின் கணவர் கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார்.

7. மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்: எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம். பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கிறது.

8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்: வட்டிக்கு கடன் கொடுக்கும் நிறுவனம். இயக்குநர்கள் - கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார், பூங்குன்றன்.

இவைதவிர, டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட மேலும் சில நிறுவனங்கள். காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட், வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட், சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்.

கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்!   

ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதில், ஜெயா பிரின்டர்ஸ் நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் 58 லட்சமும், மகாலெட்சுமி திருமண மண்டபம் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானவை என்று நிரூபிக்கப்பட்டவை. அதாவது, ஜெ., சசிக்குச் சொந்தமான நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள 32 பினாமி நிறுவனங்கள்!

பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கூறியுள்ள 32 நிறுவனங்களின் பட்டியல் இவை: ஜே ஃபார்ம் ஹவுசஸ், ஜே.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட், ஜே ரியல் எஸ்டேட், ஜெயா கான்ட்ராக்டர் அன்ட் பில்டர்ஸ், ஜே எஸ் லீசிங் அன் மெயின்டெனன்ஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுசஸ், மெட்டல் கிங், சூப்பர் டூப்பர் டி.வி. லிமிடெட், ஆஞ்சனேயா ப்ரின்டர்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சினோரா பிசினஸ் என்டர்ப்ரைசஸ், லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் டெவலப்மென்ட், ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அண்டு பார்மசூட்டிக்கல்ஸ், ஏ.பி அட்வர்டைசிங் சர்வீசஸ், விக்னேஷ்வரா பில்டர்ஸ், லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்ஸ், கோபால் ப்ரமோட்டர்ஸ், சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ், நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட், அய்யப்பா  ப்ராப்பர்டி டெவலப்மென்ட்ஸ், சீ என்க்ளேவ், நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ், ஓஷியானிக் கன்ஸ்ட்ரக்சன்ஸ், க்ரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ், மார்பிள் மர்வெல்ஸ், வினோத் வீடியோ விஷன், ஃபேக்ஸ் யுனிவெர்சல், ஃப்ரெஷ் மஷ்ரூம்ஸ், சூப்பர் டூப்பர் டிவி மற்றும், கொடநாடு டீ எஸ்டேட்.