எந்த அதிகாரப் பதவியிலும் இல்லாத சசிகலாவை எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போய் சந்தித்திருக்கிறார்கள் தமிழகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள். ‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவர் வழியில் சசிகலா அ.தி.மு.க-வின் தலைமையேற்க துணைவேந்தர்கள் நேரில் வலியுறுத்தினார்கள்’ என நமது எம்.ஜி.ஆர் செய்தி வெளியிட்டிருக்கிறது.

‘‘எதற்காகப் போய் பார்த்தீங்க?’’ என்ற ஒற்றைக் கேள்வியை அவர்களிடம் வீசினோம். அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?

சுவாமிநாதன் (சேலம் பெரியார் பல்கலைக்கழகம்): ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் துக்கம் விசாரிக்க முடியவில்லை. அதனால் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றோம். அங்கு சசிகலாவிடம் துக்கம் விசாரித்தோம். மற்றபடி இதில் வேறு எந்தக் காரணமும் கிடையாது.’’

மணியன் (சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம்): “கூட்டம் அதிகமாக இருந்தால் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தில் யாரை சந்தித்து ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. அதனால்தான் சசிகலாவை சந்தித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் இரங்கல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தோம்.”

கணபதி (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்): ‘‘முதல்வருக்கு அஞ்சலி செலுத்த செல்லமுடியவில்லை. அன்று மாலையே அடக்கம் செய்துவிட்டனர். அந்த நேரத்தில் செல்வதற்கு விமானமும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் அனைவரும் கலந்துபேசி போயஸ் கார்டனில் இரங்கல் தெரிவித்துவிட்டு வந்தோம்.’’

க.பாஸ்கரன் (தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம்):  ‘‘நான் யாரையும் போய் சந்திக்கவில்லை. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.பாஸ்கரன், சசிகலாவை சந்தித்திருக்கிறார். அதில் நிறையபேருக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.’’

ராமசாமி (கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்):  ‘‘12 பேர் சசிகலாவைச் சந்தித்து இரங்கல் தெரிவித்தோம். மற்றபடி வேறு எதையும் பேசவில்லை. அதற்கான சூழலும் இல்லை. அது இரங்கலுக்கான சந்திப்பு மட்டுமே.’’

க.முருகன் (வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம்): ‘‘பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுவாமிநாதன் சார்தான், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும்’ என சொன்னார். அதனால் பங்கேற்றோம். ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம். சசிகலாவிடம் எதுவும் பேசவில்லை.’’

முத்துக்குமார் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்):  ‘‘முதல்வர் இறந்த அன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. அதனால், அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தோம். சசிகலா மேடத்திடமும் மற்றவர்களிடமும் துக்கம் விசாரித்துவிட்டு வந்தோம்.”

கீதாலட்சுமி (தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்): ‘‘ சசிகலா அவர்களிடம் நாங்கள் இரங்கல் தெரிவிக்க வந்தோம் என்று மட்டுமே கூறினோம். வேறு எதுவுமில்லை. முக்கிய பொறுப்பில் உள்ள நாங்கள் எந்த தவறும் செய்ய மாட்டோம். மற்ற துணைவேந்தர்கள் அழைத்ததால்தான் சென்றேன்.’’

ஏ.எம்.மூர்த்தி (தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகம்): ‘‘இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதற்கு அரசியல் உள் நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.”

வணங்காமுடி (அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்): ‘‘தமிழகத்தில் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் சந்திப்பு நடந்தது. பல்கலைக்கழகங்களுக்கு அரசு உதவி வழங்குகிறது. அதனால் துணைவேந்தர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டியது அவசியம் என நாங்கள் கருதினோம். அதனால்தான் சசிகலாவைச் சந்தித்தோம்.’’

சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசனை தொடர்பு கொண்டபோது ‘‘தலைமைசெயலகத்துக்குச் சென்றுள்ளார். பிறகு தொடர்புகொள்ளுங்கள்’’ என சொல்லி அவருடைய உதவியாளர் தொடர்பை துண்டித்தார்.

- வீ.கே.ரமேஷ், க.பூபாலன், சி.ஆனந்தகுமார், ஏ.ராம், கே.புவனேஸ்வரி, ம.சுமன்

பின்னணி என்ன?

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் சந்தித்ததாகச் சொல்லப்பட்டாலும் பின்னணியில் இருந்தவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முத்துக்குமார் மட்டுமே. சசிகலாவின் அருகில் பவ்வியமாக நின்ற இவர், சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக வரவேண்டும் எனத் துணைவேந்தர்களிடம் கையெழுத்து வாங்கி, அந்தக் கடிதத்தைக் சசிகலாவிடம் நேரில் கொடுத்தாராம். ‘‘முத்துக்குமாருக்கு பூர்வீகம் தஞ்சாவூர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மூலம், சீட் வாங்க முயன்றார். வைத்திலிங்கமோ, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை வாங்கித் தந்தார்” என்று சொல்கிறார்கள். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முத்துக்குமாரிடம் ‘‘துணைவேந்தர்கள் அனைவரையும் நீங்கள்தான் ஒருங்கிணைத்து அழைத்து சென்றதாக சொல்கிறார்களே’’ எனக் கேட்டோம்.

‘‘சசிகலாவைச் சந்தித்தது அரசியல் காரணங்களுக்காக அல்ல’’ என்றார்.