1. தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அண்ணா நகர் வீட்டில் ரெய்டு நடந்த நேரத்தில் வீட்டின் போர்ட்டிகோவில் TN 15 G 0047 பதிவு எண் கொண்ட, தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான மகேந்திரா பொலீரோ ஜீப் ஒன்று நின்றிருந்தது. இந்த வாகனம் உளுந்தூர்பேட்டை ஆர்.டி.ஓ ஆபீஸில் ஜூலையில் பதிவுசெய்யப் பட்டிருக்கிறது. வனத்துறையின் வாகனம் ராம மோகன ராவ் வீட்டில் எதற்கு நிற்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், வனத்துறையைச் சேர்ந்த ஒரு பிரமுகருக்கும் ராம மோகன ராவுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்திருக்கிறது வருமானவரித் துறை.

2. சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட TN 06 Q 2266 என்ற பதிவு எண் கொண்ட டொயோடோ வண்டியும் ராம மோகன ராவ் வீட்டில் நின்றிருந்தது. ரிஜிஸ்ட்ரார் ஒருவருக்குச் சொந்தமான அந்த வண்டி 2015 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டது. ரெய்டு முடிந்த அடுத்த நாள் அந்த கார் வீட்டில் இருந்து புறப்பட்டுப் போனது. ஆனால், தலையில் சிவப்பு விளக்கு மிஸ்ஸிங்.

3. TN 04 BG 0789 என்ற பதிவு எண் கொண்ட டொயோடோ கார் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. நீல நிற விளக்கு பொறுத்தப்பட்ட அந்த கார், துணைச் செயலாளர் ஒருவருக்குச் சொந்தமானது. இந்த கார் வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தலைமைச் செயலாளருக்கு என தனியாக கார் இருக்கும்போது எதற்காக இந்த கார்கள் அவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தன? அதிகாரத்தை மீறி அளவுக்கு அதிகமான கார்களை ராம மோகன ராவ் பயன்படுத்தியிருக்கிறார்.

தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் ஆட்டம் போட்டபோது ஸ்லோவாக இருந்த தமிழக அரசு, ரெய்டுக்குப் பிறகு ஸ்பீடு காட்டியது. வீட்டுக்கு வந்த போஸ்ட் வுமன் ஸ்பீட் போஸ்ட் கவர் ஒன்றைக் கொடுத்துவிட்டுக் கையெழுத்து வாங்கிப் போனார். அந்த கவர், ராம மோகன ராவின் சஸ்பெண்ட் ஆர்டர்.

திருவான்மியூர் ஏரியாவில்தான் ராம மோகன ராவின் மகன் விவேக் வீடு இருக்கிறது. அந்த வீட்டிலும் சோதனை போடப்பட்டது. அரசின் எந்தப் பதவியிலும் இல்லாத அவர் வீட்டில் அரசு கார் ஒன்று நின்றிருந்து. TN 09 BY 5107 என்ற பதிவு எண் கொண்ட அந்த கார், தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு நியூஸ் பிரின்ட் மற்றும் பேப்பர் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
படங்கள்: ஆ.முத்துக்குமார், சொ.பாலசுப்ரமணியன், தே.அசோக்குமார்