மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குடும்ப நண்பர் கீதா தொடுத்துள்ள வழக்கால், தமிழக அரசியலில் உஷ்ணம் பன்மடங்கு எகிறியுள்ளது.

‘ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது... அதைக் கேட்க நட்பு என்பதைத் தாண்டி 24 ஆண்டுகால கட்சி உறுப்பினர் என்ற உரிமையும் எனக்கு இருக்கிறது’ என்பது கீதா வழக்கின் முக்கிய சாரம். கீதா ஒரு வழக்கறிஞரும்கூட.

சென்னை பெருநகர எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கீதாவை சந்தித்துப் பேசினோம்.

‘‘நீங்கள் வழக்குத் தொடர்ந்ததே விளம்பரத்துக்குத்தான் என்கிற கருத்து நிலவுகிறதே?’’

“விளம்பரம் என்ற கருத்தைப் பரப்புவது மன்னார்குடி குடும்பமாகத்தான் இருக்க முடியும். ஒரு தொண்டனும் இதைச் சொல்ல மாட்டான். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் கிடந்த தொண்டனுக்கு நான் பாதையைக் காட்டியிருக்கிறேன்.”

‘‘அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை நீங்கள் போய்ப் பார்த்தீர்களா?’’

“மன்னார்குடி குடும்பத்தைத் தவிர அங்கே அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களின் ஆதரவைப் பெற்றவர்களே. மேலும், தீபா போய், ‘என்னை உள்ளே அனுப்புங்கள்’ என்று கதறியபோது நான் ஊரிலும் இல்லை. அப்போலோ வாசலில் இருந்தபடி எனக்கு தீபா போன் செய்தார். ‘அத்தையின் கையைப் பிடித்து ஒரே ஒரு கிஸ் பண்ணிவிட்டு வந்துவிடுகிறேன், அதுபோதும்... எனக்கு யாரிடமாவது பேசி அனுமதி வாங்கிக் கொடுங்கள்’ என்று புலம்பினார். நானும் முயற்சித்தேன், அதற்குள் தீபாவை அந்த கும்பல் அங்கிருந்து விரட்டிவிட்டது.”

‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் என்ன மர்மம் என்று சொல்ல வருகிறீர்கள்?’’

“ஒரு மாநில முதலமைச்சருக்கு அதுவும் உடல்நிலை கொஞ்சம் சரியில்லாதவருக்கு அவரது வீட்டின் அருகே எப்போதும் ஒரு ஆம்புலன்ஸை நிறுத்திவைப்பது வழக்கம். ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்ட அன்று அதை ஏன் பயன்படுத்தவில்லை? ஜெயலலிதாவின் கறுப்புப்பூனைப் படை இந்த 75 நாட்களில் எங்கே போனது? அப்போலோவில் 75 நாட்கள் இருந்தவரின் முகம் ஊசி, மருந்து சிகிச்சைகளால் கறுத்துப் போய்த்தானே இருக்கும். இறக்கும் போதுமட்டும் முன்பைவிட ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் அந்த முகம் எங்கிருந்து வந்தது?

அப்போலோ நாட்களில், ஒரு புகைப்படம்கூட வெளியிடவில்லை, கவர்னர் உள்பட யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அப்போலோவிலும், போயஸ் கார்டனிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லையா? இந்த 75 நாட்களில் நடந்த அத்தனை நடவடிக்கைகளும் அந்த கேமரா பதிவுகளில் இருக்கும். அதை வெளிக்காட்ட என்ன தயக்கம்? இறந்தது சாதாரண நபர் அல்ல, இந்த நாட்டின் ஏழரை கோடி மக்களின் முதல்மந்திரி. இப்படி ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. அதையெல்லாம் கோர்ட்டில் சொல்வேன்.”

‘‘ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பு எப்படி?’’

“அவர் என்னைவிட ஏழு ஆண்டுகள் மூத்தவர். என் அண்ணனும், அவருடைய அண்ணன் ஜெயகுமாரும் நண்பர்கள். என்னுடைய அம்மாவும், சந்தியாம்மாவும் தோழிகள். நாங்கள் ஒன்றாக வளர்ந்தவர்கள். 1961 முதல் எங்கள் குடும்ப உறவு பலமான உறவு. இந்த வரலாறு நேற்று வந்த மன்னார்குடி வகையறாவுக்கு எங்கே தெரியப் போகிறது? ‘அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திய உங்களுக்கு நன்றி’ என்று பிரதமருக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத சசிகலாவுக்கு என்ன அவசியம்?’’

‘‘வழக்கில் யார் பெயரையெல்லாம் சேர்த்துள்ளீர்கள்?’’

“சசிகலா உள்பட 20 பேர் வழக்கில் வருகிறார்கள். ஜெயலலிதா என்கிற நபர் மாநிலத்தின் முதல்வர். கட்சியின் தலைவர். யாரும், எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்ற மன்னார்குடி அதிகாரக் குரலின் குரல் வளையை இந்த வழக்கு நெரித்துவிடும். இந்த வழக்கை முதன்முதலில் கையில் எடுத்தது வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி. மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தான் போய்ச் சேரவேண்டும். போகும் இடமெல்லாம், அவரை இதற்காக ஒரு கும்பல் மிரட்டி வருகிறது. சட்டமும் தர்மமும் எங்களைக் காப்பாற்றும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் எளிதில் பொங்கி விட மாட்டார்கள்... பொங்கினால் நாடு தாங்காது.”

- ந.பா.சேதுராமன்
படம்: தி.ஹரிஹரன்