‘‘இப்போதும் நான்தான் தலைமைச் செயலாளர்’’ என ஆக்ரோஷமாகச் சொல்லும் ராம மோகன ராவ் கொளுத்திப் போட்ட பிரஸ் மீட், தகதக என எரிந்து கொண்டிருக்கிறது. ரெய்டுக்குப் பிறகு, உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, தன் வீட்டுக்குப் பத்திரிகையாளர்களை அழைத்து, தமிழக அரசு மீதும் மத்திய அரசு மீதும் தாக்குதலைத் தொடுத்தார்.

“என் பெயரில் தேடுதல் வாரன்ட் இல்லாமலே, வீட்டை சோதனை போட்டார்கள். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தத் துணிச்சல் வந்திருக்குமா? தலைமைச் செயலகத்துக்குள் அரசின் அனுமதியின்றி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை நுழைந்துள்ளது. நான் ஜெயலலிதாவின் உருவாக்கம். தமிழக அரசுக்கு திராணி இல்லை.’’ என்றெல்லாம் ராம மோகன ராவ் சொன்னது அக்மார்க் அரசியல் ரகம்! ராம மோகன ராவின் ஆக்ஷனுக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் ரியாக்ஷன் கேட்டோம்.

தேவசகாயம்: “ராம மோகன ராவின் குற்றச்சாட்டுகள் அத்தனையுமே முறையற்றவை. குற்றச்சாட்டுகள் தவறு என்றால் அவர் நீதிமன்றத்தின் வழியாகத்தான் வருமானவரித் துறையை எதிர்த்திருக்க வேண்டும். பத்திரிகையாளர்களைச் சந்தித்து, குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள். அ.தி.மு.க தொண்டராக அவர் இன்னும் மாறாததுதான் மிச்சம். பொறுப்புமிக்க முதன்மை அரசு அதிகாரியான அவர் இப்படி செய்திருக்கக்கூடாது. ‘மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தது தவறு’ என்கிறார். முதலில் இவர் வீட்டில் சோதனை செய்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக, சந்தேகத்தின் பேரில்தான் தலைமைச் செயலகத்துக்கு சோதனை செய்யச் சென்றிருக்கிறார்கள். அங்கே, தமிழக போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியிருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் மத்தியப் படையுடன் அவர்கள் சென்றனர். சேகர் ரெட்டியின் மணல் கொள்ளை மாஃபியாவில், இவருக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி இருக்கும்போது, பாதுகாப்புப் படையுடன் செல்வதில் தவறில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர்தான் தலைமைச் செயலகத்தில் நடந்தது பற்றி கருத்துக் கூற வேண்டும். ஆனால், அவர் மௌனமாக இருக்கிறார். ராம மோகன ராவ் பேசியிருப்பதுதான் ஆச்சர்யம். இது வழக்கை திசை திருப்பப் பார்க்கும் செயல்.”

கிறிஸ்துதாஸ் காந்தி: ‘‘ராம மோகன ராவ், மக்களுக்காக ஏதாவது செய்யப்போய்... அது, தடுக்கப்பட்டிருந்தால் அவர் இந்த மாதிரியான கேள்விகளை எழுப்புவது நியாயம்? ஆனால், இவர் செய்துகொண்டது அத்தனையும் தனக்காகவும், தனது மகனுக்காகவும்தான். தமிழக போலீஸ், இதுநாள் வரையில் அதனைத் தட்டிக் கேட்காததால்தான், துணை இராணுவப் படை நுழைந்துள்ளது. மகன் பெயரில்தான் வாரன்ட் இருக்கிறது என்றாலும், இவருக்குத் தெரியாமலா அத்தனை செயல்பாடுகளும் நடந்திருக்கும்? ஏதோ ஒரு திட்டத்துடன் இந்தத் திடீர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு இத்தனை ஆண்டுகள் வரை, பல மோசடிகளில் உடந்தையாக இருந்தவர்; மத்தியில் பி.ஜே.பி-க்கும் உதவி இருக்கிறார் என்பது இதுவழியாக அம்பலமாகிறது. இவ்வளவு பேசுபவர் தனது தனிப்பட்ட பிரச்னைகளுக்காக எதற்குப் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வேண்டும்? தைரியமிருந்தால் நேரடியாக நீதிமன்றம் வழியாகவே மோதியிருக்கலாமே? தனிப்பட்ட விஷயங்களுக்காக எதற்கு மக்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்?”.

சிவகாமி: “ராம மோகன ராவ் மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வீடுகளில் கிடைத்த பணம், ஒருநாளில் சம்பாதித்த பணம் இல்லை. அரசியல்வாதிகளின் ஆதரவு இல்லாமல் அவர், இப்படிச் சம்பாதித்திருக்க முடியாது. இந்த விஷயத்துக்கு அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள் மற்றும் யாருக்காக அவர் இதைச் செய்தார் என்பதைத்தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் அரசியல் மீதும், அரசுகளின் மீதும் மக்களுக்கு நம்பகத்தன்மை வரும். தற்போதைய சூழலில், ராம மோகன ராவ் தனித்து விடப்பட்டுள்ளதாகத்தான் நினைக்கிறேன். அதற்கான காரணத்தை அறிய வேண்டியதும் அவசியம். ராம மோகன ராவ் அளிக்கும் விளக்கம் உட்பட அனைத்தையும் பொதுவில் தெரியப்படுத்த வேண்டும். தலைமைச் செயலகத்தில்தான் அவர் தொடர்பான மேலும் சில ஆவணங்கள் இருக்கிறது என்ற நம்பத்தகுந்த தகவலின்பேரில், ரெய்டுக்குப் போயிருக்கலாம். ஆனால், துணை ராணுவம் உடன் சென்றது அச்சுறுத்தல்தான். ஆட்சிப்பணியில் இருப்பவர் மீது குற்றச்சாட்டு என்றால், அதனை போலீஸ்தான் முதலில் விசாரிக்க வேண்டும். அப்படியும் நிகழவில்லை. முதல்வர், கவர்னர் என யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாமல் சென்றிருக்கிறார்கள். இது தமிழக அரசின் வலுத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ‘ஏதோ ஒரு திட்டத்தை முன்னிறுத்தியே இந்த ரெய்டு நடக்கிறது’ என்ற சந்தேகத்தைச் சாதாரண மனிதனிடம் கூட இந்த சம்பவம் எழுப்பியிருக்கிறது. ‘முதலமைச்சரை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கவர்னரையும் சேர்த்தே சந்தேகப்படுகிறோம்’ என்கிற அர்த்தத்தைத்தான் இந்த ரெய்டு கொடுத்திருக்கிறது.”

ராம மோகன ராவ் அரசியலுக்கு வரப்போகிறாரோ?

- ந.பா.சேதுராமன், ஐஷ்வர்யா
படம்: ஆ.முத்துக்குமார்