Published:Updated:

இலங்கை மீது போர்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமை தாயகம் அறிக்கை

இலங்கை மீது போர்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமை தாயகம் அறிக்கை
இலங்கை மீது போர்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமை தாயகம் அறிக்கை
இலங்கை மீது போர்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமை தாயகம் அறிக்கை

சென்னை: இலங்கை மீதான போர்குற்ற விசாரணை வேண்டி பசுமை தாயகம் சார்பில் ஐநா சபைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

என்னால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத்தாயகம், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைக ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத் தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர்
கோ.க.மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் அருள் ஆகியோர் பங்கேற்றனர். ஐ.நாவின்அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும், அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும்.

அதன்படி பசுமைத்தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.பசுமைத் தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில்
நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள்  குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டுவருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான பசுமைத் தாயகம் அதனால் முடிந்த அளவுக்கு இதை செய்துள்ளது. ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளதாக
காட்டிக்கொள்ளும்  மத்திய அரசும் இதே போன்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.