Published:Updated:

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

Published:Updated:
‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர் பாளரும், இளைஞர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜோதிமணிக்கு, எதிரான வக்கிரத்தாக்குதல், அரசியல் வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடியை அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் என்ற காரணத்துக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து, ஜோதிமணிமீது வக்கிரத்துடன் தாக்குதல் நடத்திவருகிறது ஒரு கும்பல். இதுதொடர்பாக, ஜோதிமணியிடம் பேசினோம்.

‘காவி’களின் ‘பச்சை’ தாக்குதல்! - கொந்தளிக்கும் ஜோதிமணி

“என்ன நடந்தது?”

 “கரூர் மாவட்டத்தில் பெரிய திருமங்கலம் என்ற ஒரு குக்கிராமத்தில் எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் நான். மக்கள் பணி மீதான விருப்பத்தால் சிறுவயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். 22 வயதிலேயே க.பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வாகி, 1996-ல் இருந்து தொடர்ந்து இரண்டு முறை இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் தேசிய, மாநில அளவில் முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளேன். அரசியலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை. அப்படிப்பட்ட என்மீது அருவருக்கத்தக்க வகையில், ஆபாச வார்த்தைகளால் தாக்குதல் நடத்துகிறார்கள். என் செல்போனைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். எனக்கு எதிராக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதில் என் நம்பரைப் போட்டு, ‘இவள் மோசமானவள்...’ என்று மிக ஆபாசமாக, இழிவாகச் செய்தி பரப்புகிறார்கள்.”

“இதைச் செய்பவர்கள் யார்?”

“பி.ஜே.பிகாரர்கள்தான் இதைச் செய்கிறார்கள். முன்னாள் பி.ஜே.பி தொண்டரான சாத்வி கோஸ்லா  என்பவர் ‘எதிர்க்கட்சிகளையும், அமீர்கானையும் கேவலமாகத் திட்டச் சொல்லி பி.ஜே.பி-யின் தலைமை வெளிப்படையாகச் சொல்வாங்க’ என்று பேட்டி கொடுத்து அதிர்ச்சி அடையவைத்தார். அந்தச் செய்தியை என் ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 29-ம் தேதி பகிர்ந்தேன். அன்று இரவே எனக்கு திருநெல்வேலியில் இருந்து என் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தைகளில் ஆரம்பித்த அந்த நபர், தன்னை ‘பி.ஜே.பி ஆள்’ என்று சொல்லிக் கொண்டார். ‘என்ன தைரியம் இருந்தா, பி.ஜே.பி-க்கு எதிரான கருத்தைப் பதிவு பண்ணி இருப்ப. ஒழுங்கா அதை நீக்கு’ என்று மிரட்டினார். ‘அது பகிரப்பட்ட செய்திதான். அதை நீக்க முடியாது. வேணும்னா எதிர்க் கருத்து போடுங்க’ என்று சொன்னேன். அதுக்கு என்னைப் பற்றி மோசமாகப் பேச ஆரம்பித்தார். நான் உடனே போனை கட் பண்ணிட்டேன். அதைத்தொடர்ந்து எனக்கு ஏகப்பட்ட செல்போன் அழைப்புகள் வரஆரம்பித்தன. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட கால்கள் வந்துள்ளன. எனக்கு எதிராக ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து, அதில் என் போன் நம்பரைப் போட்டு என்னைப் பற்றி எந்த அளவுக்குக் கொச்சையாகப் பதிவுகள் போடமுடியுமோ அவ்வளவு கேவலமாகப் போட்டுள்ளனர். வாய்ஸ் மெஸேஜும் அனுப்பியுள்ளனர்.”

“இதற்கு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”

  “இது, எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் நடந்த பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த பெண் சமூகத்துக்கும் இது எதிரானது. அவ்வளவு ஏன், பொதுவாழ்வில் இருக்கும் ஆண்களுக்கும் ஏற்படும் கொடுமைதான் இது. எனக்கு அனுப்பப்பட்ட ஆபாசமான பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து என் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டேன். அதை, ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடிக்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அனுப்பினேன். என்னைப் பற்றி ஆபாசமான கருத்துகளைப் பதிந்த தங்கள் கட்சியினரைக் கண்டிக்காத பி.ஜே.பி-யின் தலைமை, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மூலமாக, என் ஃபேஸ்புக் பக்கத்தில் நான் வெளியிட்ட ஸ்க்ரீன்ஷாட் பதிவுகளை நீக்கவைத்துள்ளனர். இதன் மூலம் பி.ஜே.பி-யின் வக்கிர முகம் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

“இதற்கு முன்பாக இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ளதா?”

 “ஏற்கெனவே, நில அபகரிப்புச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்றபோது, அதற்கு எதிரான கருத்தைப் பதிவுசெய்தேன். அப்போதும் ஆபாச அர்ச்சனை செய்தனர். அதற்கு அடுத்தும் சில முறை இதுபோன்ற தாக்குதலை நடத்தினர். வெளிநாட்டு நம்பர்களில் இருந்துதான் ஆபாச அழைப்புகள் அதிகமாக வருகின்றன. இதை, பி.ஜே.பி தொண்டர்கள் தாங்களாகவே செய்வதாகப் பார்க்கமுடியவில்லை. பி.ஜே.பி தலைமையே திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்த வைத்துள்ளது. தங்களை  விமர்சிப்பவர்கள்மீது இதுபோன்ற தாக்குதலை நடத்த, பி.ஜே.பி தனது தொழில்நுட்பப் பிரிவை உலகம் முழுக்க வியாபித்து வைத்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பெண்களை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தும் ஆதிகாலத்து சித்தாந்தத்தை, இளைஞர்களின் மனதில் பி.ஜே.பி வளர்க்கிறது. இது ஒரு தவறான போக்கு. பி.ஜே.பி-யைச் சேர்ந்த தமிழிசை, வானதி போன்றவர்களுக்கும் இந்த நிலைமை ஏற்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? அவங்களுக்கும் சேர்த்து, தமிழகத்தில் உள்ள மூன்று கோடி பெண்களுக்குமான போராட்டத்தை முன்னெடுக்கப் போகிறேன். முதற்கட்டமாக கரூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுக்கப் போகிறேன். தமிழகம் முழுவதும் ஏராளமானோர் தனிப்பட்ட முறையில் புகார்கள் கொடுக்க உள்ளனர். பெண்கள் அமைப்புகள், அரசியல்  கட்சிகள் இணைத்து இதை ஒரு பெரிய இயக்கமாகவும் கொண்டுபோக உள்ளோம்” என்றார்.

- துரை.வேம்பையன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism