Published:Updated:

ஆஹாங் அவார்ட்ஸ்

ஆஹாங் அவார்ட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹாங் அவார்ட்ஸ்

கற்பனை: தமாஷ்மாரோ ஓவியங்கள்: கண்ணா

ற்கெனவே ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா தரணும்னு டெல்லிக்கு ஃப்ளைட் பிடிச்சுப்போய், பிரதமர்கிட்ட கோரிக்கை வெச்சுக் கும்பிடு போட்டாரு ஓ.பன்னீர்செல்வம். இப்போ என்னடான்னா, ஏதோ கால் கிலோ கத்தரிக்காய் வேணும், அரை கிலோ அவரைக்காய் வேணும்கிற ரேஞ்சுக்கு ‘ஜெயலலிதாவுக்கு மகசேசே விருது தரணும்’, ‘ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரணும்’னு மெர்சல் ஆகிற அளவுக்கு மிரட்டல் தீர்மானங்கள் போட்டிருக்காங்க அ.தி.மு.க பொதுக்குழுவில். அவங்க மட்டும்தான் திகில் தீர்மானங்கள் போடுவாங்களா? இதோ நாமும் கோரிக்கை வைக்கிறோம்ல..?

சிறந்த ஆர்ட் டைரக்டர் விருது:
சசிகலாவைப் பொதுச்செயலாளராக அறிவித்த கையோடு, ஜெயலலிதா பேனருக்குப் பதிலாக, சசிகலா பேனர் வைத்த ரணகள ர.ர-க்களுக்கு!

ஆஹாங் அவார்ட்ஸ்

எம்.ஜி.ஆர் விருது:
என்னதான் படங்களில் வில்லனா நடிச்சாலும், அ.தி.மு.க-விலும் மானம், சுயமரியாதை எல்லாம் இருக்கிற ஒருத்தர் இருந்தார்ங்கிறதுக்கான அடையாளமான ஆனந்தராஜுக்கு!

சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் விருது:
கங்கா சந்திரமுகியா மாறுவது மாதிரி, சின்னம்மா... அம்மா ஆக, பச்சை கலர் சேலைகட்டி பவ்யம் காட்டினாங்களே, அதே சசிகலாவுக்குத்தான்! (சிறந்த நடிகை விருதும் கொடுக்கலாம் என்பது சின்னம்மாவின் சிறப்பு)

வடிவேலு விருது:
‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குற’ ரொம்ப்ப்ப நல்லவர் இந்தத் தமிழ்நாட்டிலேயே யாரு? அட, அதாங்க நம்ம பன்னீரு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆஹாங் அவார்ட்ஸ்

சிவாஜிகணேசன் விருது:
சிரித்துக்கொண்டே அழுவது, அழுதுகொண்டே சிரிப்பது என்று நடிப்பில் நவரசங்களைக் காட்டுவது சிவாஜிகணேசனின் சிறப்பு. ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனபோது, பதவி ஏற்கும்போது ‘பாசமலர்’ சிவாஜிகணக்காகக் கண்ணைக் கசக்கிவிட்டு, அதே ஜெயலலிதா இறந்த நாள் அன்றே சிரித்துக்கொண்டு கையாட்டிய வளர்மதிக்கு!

சிறந்த திரைக்கதை விருது:
வேற யாரு, அப்போலோ ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்குத்தான்!

சிறந்த இயக்குநர் விருது:
பின்னாலிருந்து இயக்கும் நடராசனுக்கு!

ஆஹாங் அவார்ட்ஸ்

சிறந்த வில்லன் விருது:
ராம மோகன ராவில் ஆரம்பிச்சு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சொல்லும் ராமதாஸ், ஸ்டாலின் வரைக்கும்!

கமல்ஹாசன் விருது:

‘கட்சியைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியே இல்லை’ என கதிகலங்கி சிந்திக்கும் நாஞ்சில் சம்பத்துக்கு!

சிறந்த துணை நடிகர்கள் விருது:

சசிகலாவுக்கு ஆரவாரமா ஆரத்தி எடுத்த துணைவேந்தர்களுக்கு!

ஆஹாங் அவார்ட்ஸ்

சிறந்த நகைச்சுவை நடிகர் விருது:
‘சசிகலா திராவிடத் தலைவி, சசிகலாவைத் தலைமைக்கு வரவிடாமல் ஆரிய - திராவிடப் போராட்டம் நடக்கிறது’ என்றெல்லாம் அறிக்கைவிட்டு, காமெடி கலகலப்பூட்டும் கறுப்புச்சட்டை வீரமணிக்கு!