ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டா அமைப்பின் நல்லெண்ணத் தூதராக இருப்பதால், சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நடிகை த்ரிஷா. ‘எவ்வளவு பாரம்பர்யமான விஷயமாக இருந்தாலும், மிருகங்கள் சித்திரவதை செய்யப்படுவதை நியாயப்படுத்த முடியாது என ஜல்லிக்கட்டுக்கு எதிராக த்ரிஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்’ என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலால், நிலவரம் கலவரம் ஆனது.

இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமாவிடம் பேசினாம். “ஜல்லிக்கட்டுக்கு எதிராக எப்பவும் நாங்கள் பேசியதே இல்லை. ஜல்லிக்கட்டு பற்றி ஒரு வார்த்தைகூட என் மகள் த்ரிஷா பேசவில்லை. அதுவும் ட்விட்டர், ஃபேஸ்புக் எதிலும் ஜல்லிக்கட்டு பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. எதற்காக எங்களைப்பற்றி தவறாகப் பேச வேண்டும் என்று புரியவில்லை. அப்படி ஏன் தவறாக நினைத்தார்கள் என்றும் தெரியவில்லை.

காரைக்குடியில் ‘கர்ஜனை’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் நடந்தது. அங்கு, த்ரிஷா இருந்தார். அப்போதுதான் பிரச்னை ஆரம்பமானது. அதனால் மதுரை, திருச்சி என எல்லா இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் த்ரிஷாவை சென்னைக்கு அழைத்துவந்தனர். ஜல்லிக்கட்டு பற்றி ஒரு வார்த்தைகூட கருத்து சொல்லாத நிலையில், எங்களைப் பற்றி அநாகரிகமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதைப் பார்த்து த்ரிஷா ரொம்பவும் நொந்து போய்விட்டார்.

நானும் தமிழச்சிதான். தமிழ்ப் பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். எந்தக் கருத்தையும் நாங்கள் சொல்லாதபோது, எங்கள் மனதை நோகடிக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். இதுதான் தமிழ்க் கலாசாரமா? பெண்களை மதிப்பதுதானே தமிழ்க் கலாசாரம்? ஒருவேளை, நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியிருந்தால்கூட உங்கள் கோபத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளலாம். எதுவுமே பேசாத நிலையில் இவர்கள் ஏன் எங்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்... வீண்பழி சுமத்துகிறார்கள்?

‘சப்போர்ட் த்ரிஷா’ என ட்விட்டரில் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்தனர். அதில் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிந்துவிட்டனர். அதற்குள் யாரோ, பீட்டாவில் த்ரிஷா உறுப்பினராக இருக்கிறார் என்றும், தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார் என்றும் அவதூறு பரப்பிவிட்டனர். அதைக் கண்டு த்ரிஷா பதறிவிட்டார். த்ரிஷா தனது ட்விட்டர் கணக்கை நன்கு பராமரித்து வருகிறார். 3.02 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். ஜிமெயிலும் ட்விட்டரும் லிங்க் ஆகி இருப்பதால், ஜிமெயில் மூலமாக ட்விட்டருக்கு வந்து யாரோ த்ரிஷா கணக்கில் அந்த அவதூறு கருத்தைப் பதிவுசெய்துள்ளனர். இவை அனைத்தும், 10 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. த்ரிஷா திரும்பவும் ட்விட்டருக்குள் வந்து தனது பாஸ்வேர்டை மாற்றி, ‘இது நான் செய்த ட்வீட் அல்ல... தயவுசெய்து இதை நம்பாதீர்கள்’ என்று ட்வீட் செய்தார். மேற்கொண்டு யாராவது ஹேக் செய்து, வேறு ஏதாவது பிரச்னையை உண்டாக்கிவிடுவார்களோ என்ற பயத்தில் தன் ட்விட்டர் கணக்கையே டிஆக்டிவேட் செய்துவிட்டார். நடந்த உண்மை இதுதான்.

த்ரிஷா பெயரை எதற்காக இவ்வளவு மோசமாகக் கெடுக்க வேண்டும். மனதில் எவ்வளவு வன்மம் இருந்தால் இப்படிச் செய்திருப்பார்கள்! த்ரிஷாவின் ட்விட்டரில் யாரோ டைப் பண்ணுவதை நாங்களே கண்கூடாகப் பார்த்துள்ளோம். அப்போதுதான், ட்விட்டர் கணக்குகளை சுலபமாக ஹேக் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம். த்ரிஷாவால் எத்தனை நாய்கள் பிழைத்து உள்ளன. ‘வெளிநாட்டு வகை நாய்களை வாங்காதீர்கள். நம் இந்திய வகை நாய்களை வாங்குங்கள்’ என்று த்ரிஷா பல பேருக்கு அட்வைஸ் செய்து வருகிறார். ‘தெருவோர நாய்க்குட்டிகளை எடுத்து வளருங்கள்’ என்று த்ரிஷா செய்த அட்வைஸைக் கேட்டு, பலர் தெரு நாய்களை எடுத்து வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டு பிரச்னையால் த்ரிஷா செய்த நல்ல விஷயங்கள் எல்லாம் மறந்தே போய்விட்டனவா? இப்போது, த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து இருக்கிறேன்” என்று வேதனையுடன் குமுறினார் த்ரிஷாவின் தாயார் உமா.

- எம்.குணா