நம்மில் பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த டிசம்பர் 31-ம் தேதி காலைப் பொழுது... நாகை மாவட்டம் ஓருக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள், நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த தன் நிலத்தைப் பார்க்கச் செல்கிறார். வெடித்துக் கிடந்த நிலமெங்கும் உப்பு மட்டுமே பூத்திருந்தது. கருகிய பயிர்களில் நெல்மணிகள் செழித்து வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ‘இந்தப் பயிர்களை எப்படிக் காக்கப் போகிறோம்? அடுத்த சாகுபடியை எப்படிச் செய்யப் போகிறோம்? இதற்கெல்லாம் மேலாக வங்கியில் வாங்கிய ரூ. 8,000 கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம்?’ என்றெல்லாம் யோசித்தபடியே வரப்பில் அமர்ந்தவர், அதன்பின் எழவே இல்லை. ஆம். இறந்து விட்டார். காது சரியாகக் கேட்காத அவரின் மனைவி அறிவின்குழலி ‘அடுத்து என்ன செய்வது?’ என்று தெரியாமல் பத்துக்கு பத்து அடி அளவுடைய குடிசை வீட்டில் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

டிசம்பர்30-ம் தேதி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா சென்னையில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்திக்கொண்டிருக்க... நாகை மாவட்டம் கடம்பக்குடியைச் சேர்ந்த வீரமணி, தான் குத்தகைக்குப் பயிரிட்டிருந்த அரை ஏக்கர் நிலத்துக்குச் செல்கிறார். கருகிய பயிர்கள் தந்த இறுக்கமான அவநம்பிக்கை, அவரை இறுகத் தழுவி நிலத்தில் வீழ்த்துகிறது. அப்படியே விழுந்தவர், நிலத்தில் நிரந்தரத் துயில் கொண்டு விட்டார். இப்போது அவரது இரண்டு பிள்ளைகளும் ‘நிலத்திலிருந்து மீண்டும் நம் அப்பா உயிர்த்தெழுவார்’ என்று நிலத்தையே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கோமளப்பேட்டையைச் சேர்ந்தவர் கனிமொழி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முதல் தலைமுறைப் பட்டதாரி. தஞ்சையில் ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பு படிக்கிறார். இந்த மாதம் விடுதியின் உணவுக் கட்டணம், கல்வி, தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். அதிகமில்லை, வெறும் ரூ.4,500 தான். நிலத்துடன் முட்டிமோதிக் கொண்டிருக்கும் தன் அப்பாவின் நிலை அவருக்கு நன்கு தெரியும். பணம் இல்லாமல் கல்லூரிக்குச் செல்வதும் அவமானமாக இருந்துள்ளது. பயிர்களை வெயில் கருக்கிய ஒரு வெம்மையான நாளில் விஷத்தை அருந்தி விட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் பிழைத்துக்கொண்டார். அந்த வயதுக்கே உரிய எந்த துறுதுறுப்பும் இல்லாமல் சோகம் அடைத்த கூடாக மட்டுமே இப்போது இருக்கிறார்.

இது ஏதோ மூன்று கிராமங்களில் தனித்தனியாக நிகழ்ந்த சம்பவங்கள் அல்ல... தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்களில் இதுதான், இப்போது தினசரி நிகழ்வு. கிராமத்தின் எந்தத் தெருவிலும் பயிர்களின் பச்சைப் பயிர் வாசனை இல்லை. அந்த வாசனை வரும் என்கிற நம்பிக்கையும் இல்லை. அந்த நம்பிக்கை தரும் மகிழ்ச்சியும் இல்லை. விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஏதேனும் ஒரு டெல்டா மாவட்டத்தின்... ஏதேனும் ஒரு வீதிக்குள் நுழையுங்கள். அங்கு வாழ்தல் மீதான அவநம்பிக்கை எங்கும் படர்ந்திருக்கும்.

நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகள்!

‘விவசாயம் பொய்த்த காரணத்தினால் இதுநாள் வரை 17 பேர் இறந்திருக்கிறார்கள்’ என்று தமிழக அரசு ஒரு கணக்கை நீட்ட... ‘‘இல்லை... இல்லை... அரசு பொய் சொல்கிறது; அல்லது உண்மையை மறைக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 48 பேர் இறந்திருக்கிறார்கள்’’ என்று பட்டியலை நீட்டுகிறார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காவிரி வி.தனபாலன்.
“டெல்டாவில் விவசாயத்தை நம்பி இருக்கும் ஒவ்வொரு குடியானவன் வாழ்வும் நிலத்துடன் பின்னிப் பிணைந்தது. நிலம்தான் வாழ்வாதாரம். நிலம்தான் நம்பிக்கை. அவனுக்கு நிலம்தான் எல்லாம். அந்த நிலம் பொய்க்கும்போது, வாழ்வின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன. அதனால்தான் இத்தனை சாவுகள். இதனை உண்மையான அக்கறையுடன் அணுகி, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். ஆனால், போலி கௌரவம் பார்த்து, பொய்க் கணக்குகளை நீட்டுகிறது அரசு” என்கிறார் அவர் கோபமாக.

இதையே வழிமொழிகிறார், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், “அண்டை மாநிலமான கர்நாடகம் உண்மை நிலையைச் சொல்லி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உரிய நிதியைப் பெற்றிருக்கிறது. தமிழக அரசோ விவசாயிகளின் மரணக்கணக்கைக் குறைத்து, பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மத்திய அரசு எப்போதும் தமிழக மக்களை வேண்டாதவர்களாகவே கருதுகிறது. உயிரிழந்த உண்மையான விவசாயிகளின் எண்ணிக்கையை வெளியிட்டு, இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூபாய் 15 லட்சம் வழங்க வேண்டும். மல்லையாக்களை தப்ப விடும் அரசுகளுக்கு, இது பெரிய தொகை அல்ல” என்கிறார் அவர்.

பதியப்படாத மரணங்கள்!

இவர்களின் கோபம் நியாயமானது. உண்மையில் டெல்டாவில் எந்த விவசாயி மரணமும் முறையாகப் பதியப்படவில்லை. டெல்டா விவசாயிகளின் மரணங்களை முறையாக ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் பாலசுப்பிரமணி, “இப்போது சந்தேக மரணமாக பதியப்பட்டிருக்கும் வழக்கு... பின்னர் யாருக்கும் தெரியாமல் ‘காதல் தோல்வியில் இறந்தான்’, ‘ஆண்மை இல்லாமல் இறந்தான்’ என்று மாற்றி எழுதப்படும். இதுதானே விதர்பாவில் நடந்தது? அரசு ஒரு சமூகத்தை எந்த ஆவணமும் இல்லாமல் அழித்தொழிக்கப் பார்க்கிறது” என்றார்.

உயிர் குடிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ்!

அரசு வங்கிகள் கடன் வழங்குவதில், வசூலிப்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், ‘‘உண்மையில் எங்களுக்குப் பிரச்னை மைக்ரோ ஃபைனான்ஸுடன்தான்’’ என்கிறார்கள், நாம் டெல்டாவில் சந்தித்த பெரும்பாலான விவசாயிகள். இங்கு மைக்ரோ ஃபைனான்ஸ் பெரும்பாலும் கடன் தருவது பெண்களுக்குத்தான். ஒரு குழுவாகக் கடன் பெறுபவர்கள், அதைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். விவசாயத்தில் முதலீடு செய்யும் பெண்கள், அறுவடை பொய்க்கும்போது, அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாமல் போகிறது. இதனால், குழுவில் உள்ள மற்ற பெண்களுடனான அவர்களின் உறவு பாதிக்கிறது. இது குடும்பத்துக்குள் அமைதியின்மை நிலவக் காரணமாகிறது. இது தரும் அழுத்தமும் விவசாயிகள் சாவுக்குக் காரணம்.

அடுத்தது கால்நடைகள்!

“இப்போது விவசாயி... அடுத்து கால்நடைகள்தான்” என்கிறார் காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுவாமிமலை விமல்நாதன். “தண்ணீர்ப் பற்றாக்குறையால், கால்நடைகளுக்குரிய தீவனங்கள் இல்லை. இப்போது விவசாயி தன் காய்ந்த நிலங்களில் கால்நடைகளை மேய விட்டுக் கொண்டிருக்கிறான். அதுவும் பயிர்கள் முழுவதுமாகக் கருகும்வரை தான் இயலும். அதன்பின் என்ன ஆகும்? இப்போது விவசாயி கொத்துக்கொத்தாக செத்துக் கொண்டிருப்பதுபோல, அடுத்து கால்நடைகளும் சாகும். விவசாயி மரணத்தில் பொய் சொல்லும் இந்த அரசாங்கம், அதிலும் பொய் சொல்லும்...” என்கிறார் விரக்தியாக.

அகதிகளாக அலைய விடுகிறது அரசு!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, ‘‘இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் விவசாயம் பார்க்க வேண்டும்... வேறு ஏதாவது தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதானே..?’ என்கிறார்கள் இங்கு சில மேதாவிகள். இந்த அரசு, ஏற்கெனவே நிலத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு என்ன செய்திருக்கிறது..?

இன்று நகரங்களில் நடைபாதைவாசிகளாக இருக்கும் மனிதர்களுடன் உரையாடிப் பாருங்கள். அவர்கள் அனைவரின் ஆன்மாவுக்குள்ளும் இன்னும் ஒரு விவசாயி உயிர்ப்புடன் உலாவிக்கொண்டிருப்பான். விவசாயிகளை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவர்களை அகதிகளாக அலையவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசு” என்று கொதிக்கிறார்.

எல்லோரும் இறந்தபின், பிணங்கள் மீதமர்ந்து ஆட்சி செய்ய முடியாது. இதை உணர்ந்து தமிழக அரசு துரிதமாகச் செயல்படவேண்டும்!

- மு.நியாஸ் அகமது