ஏற்கெனவே கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழக அரசின் தலையில், மேலும் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை ஏறுகிறது. உபயம்... உதயம் மின் திட்டம்.

ஜெயலலிதாவின் விருப்பங்களுக்கு மாறான திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் அரசின் சமீபத்திய சரண்டர், ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா’ என்ற ‘உதய்’ மின் திட்டம். மத்திய அரசின் உருட்டல் மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல், உதய் திட்டத்தை எதிர்த்து வந்தார் ஜெ. அந்தத் திட்டத்தைத்தான், மத்திய அரசிடம் அடிபணிந்து ஏற்றுக்கொண்டு உள்ளது, ஓ.பி.எஸ் அரசு.

இந்தத் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால், ஜெ. மறைவுக்குப் பிறகு, நிலைமை தலைகீழாகிவிட்டது. டெல்லிக்குச் சென்று இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ‘மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண உயர்வு என்ற அம்சத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்ததால் இதை ஏற்றுக்கொண்டோம்’ என்றார்.

உதய் திட்டத்தில் இணைந்ததால், நன்மையா... தீமையா? தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் விஜயனிடம் கேட்டோம்.

‘‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டேன்ஜெட்கோ) இன்றைய கடன் சுமார் ரூ.81,312 கோடி. இதில், மின் பகிர்மானக் கடன் ரூ.30.420 கோடி. இந்தக் கடனில், உதய் திட்டத்தின்படி, 75 சதவிகிதத்தை மாநில அரசு எடுத்துக்கொள்கிறது. இதனால் டேன்ஜெட்கோ, கடன் சுமையில் இருந்து விடுபடும். பழைய கடன்களை மாநில அரசு ஏற்பதால், டேன்ஜெட்கோவுக்கு இனிமேல் கடன் கிடைக்கும். அதை வைத்து மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவார்கள். கடந்த காலத் தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக, உதய் திட்டத்தின் மூலம், மீண்டும் அதே நிலைக்கு டேன்ஜெட்கோவைத் தள்ளுகிறார்கள்” என்றார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி, “2000-ம் ஆண்டுவரை, தமிழ்நாடு மின்வாரியம் லாபத்தில் இயங்கியது. இந்தியாவிலேயே ‘பெஸ்ட்’ மின்வாரியமாக விளங்கிய இது, இப்போது ‘ஒர்ஸ்ட்’ மின்வாரியமாக உள்ளது. இதற்கு முழுக்காரணம், மத்திய அரசு கொண்டுவந்த மின்சார ஒழுங்குமுறைச் சட்டம்தான். இலவச மின்சாரம் வழங்கியும்கூட, லாபத்தில் இயங்கிவந்த தமிழக மின்வாரியம், தனியாரை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கையால் மோசமான நிலைக்குப் போய்விட்டது. தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மின்வாரியம் தள்ளப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் சுருட்டினார்கள். இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கியதாலும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாலும், ‘இனிமேல் டேன்ஜெட்கோவுக்குக் கடன் வழங்க முடியாது’ என்று வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கைவிரித்தன. தற்போது, உதய் திட்டத்தால், மின்வாரியத்துக்குக் கடன் கிடைக்க வழி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். அவ்வளவுதான்” என்றார்.

இந்தத் திட்டம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசினோம். “அம்மா உயிருடன் இருந்தபோது, இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத் திருத்தம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து, ஒரு குடிசைக்கு ஒரு விளக்குத் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவற்றை ரத்துசெய்ய மாட்டோம் என்ற நிபந்தனையை வைத்தார். இவற்றை ஏற்றுக்கொண்டதால்தான், அமைச்சரவை முடிவுப்படி அதில் கையெழுத்திட்டோம். மின் உற்பத்திக்குத் தேவைப்படும் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துவந்தோம். இனி, அதற்கு அவசியம் இருக்காது. உள்நாட்டிலேயே நிலக்கரி வாங்கிக்கொள்ள உதய் திட்டத்தில் வழிவகை இருக்கிறது” என்றார்.

மின்சாரச் சட்டம் 2003-ன் படி, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தங்களே மின்வாரியங்களில் கடன்வலையில் சிக்கியதற்கு முக்கியக் காரணம். மின் விநியோகத்தில், பல தனியார் விநியோகஸ்தர்கள் இருக்கலாம் என்று மின்சாரச் சட்டம் 2014-ல் உள்ளது. இது ஒரு மோசமான அம்சம். இது, பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும் மின்வாரியங்களையே காலிசெய்துவிடும். அப்படியொரு நிலைமை ஏற்படுமானால், 2 வாரங்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வதைப்போல, மின்சாரத்தின் விலையும் உயரக்கூடிய நிலை ஏற்படும்.

- ஆ.பழனியப்பன்