நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு... அவரை கௌரவிக்கும் வகையில், 2006-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசால் சென்னை கடற்கரைச் சாலையில் சிவாஜி கணேசனுக்கு வெண்கல உருவச் சிலை நிறுவப்பட்டது. ‘அந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

‘சிவாஜி சிலையை அகற்றுவது’ பற்றி முடிவெடுக்கும்படி 2014-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி, சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிலுவையில் இருந்தபோதே, ‘விரைவில் சிவாஜி சிலை அகற்றப்படும்’ என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.

பல்வேறு கட்சித் தலைவர்களும், சிவாஜி ரசிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சிலையை அகற்றும் முடிவைத் தள்ளிப் போட்டது தமிழக அரசு. இதனிடையே, சிலை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார் நாகராஜன். இதை விசாரித்த நீதிமன்றம், இதற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது. இந்த நிலையில், வேறொரு முடிவை எடுத்தது தமிழக அரசு. அதாவது, நடிகர் சங்கம் மூலம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்தது. அங்கு சிலையை இடமாற்றம் செய்ய நினைத்தது. ஆனால், நடிகர் சங்கமோ மணிமண்டபம் கட்டவில்லை. அ.தி.மு.க அரசு, மீண்டும் 2016-ல் ஆட்சிக்கு வந்தவுடன், ‘சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்று அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் நீதிமன்றம் சென்றார் நாகராஜன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பிறகு, சிலை வேறு இடத்தில் நிறுவப்படும். மே 18-ம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றப்படும்’ என்று தமிழக அரசு உறுதியளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், வழக்கை அத்துடன் முடித்துவைத்தது.

இதுகுறித்துப் பேசிய சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன், ‘‘சிலை அகற்றப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் உத்தரவு எங்களுக்குத் துரதிர்ஷ்டவசமானது. இதேபோன்ற பல தலைவர்களின் சிலைகள் சென்னைச் சாலைகளில் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால், சிவாஜி சிலையை மட்டும் குறிப்பாக அகற்றுவது என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது. எல்லாத் தலைவர்களுக்கும் அவர்களுடைய சிலைகள் தனியாகவும், மணிமண்டபங்கள் தனியாகவும்தான் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலையை அகற்றும்போது... அதே வரிசையில் இருக்கும் காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் இடையில் வைப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதே சிவாஜி ரசிகர்களின் விருப்பம்’’ என்றார்.

மக்கள் மனத்தில் இடம் பிடித்தவருக்கு, சிலையாய் நிற்க இடம் இல்லையா?

- ஜெ.பிரகாஷ்