Published:Updated:

50 MB-க்கு இருக்கிற பவர்கூட 50 MP-க்கு இல்லை!

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
50 MB-க்கு இருக்கிற பவர்கூட 50 MP-க்கு இல்லை!

எருதுப் புரட்சி!

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!

லங்காநல்லூரில் கொளுத்திப் போட்ட திரி, மெரினாவில் கொழுந்துவிட்டு எரிய... அது தமிழகம் முழுவதும் இளைஞர்களின் அறப்போராட்டமாகப் பற்றிக்கொண்டது.

அலங்காநல்லூர் வாடிவாசலில் 16-ம் தேதி காலையில் திரண்டது இளைஞர்கள் கூட்டம். இவர்கள் மதுரைக்காரர்கள் அல்ல. வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். அன்று காலையில் தொடங்கிய போராட்டம் நள்ளிரவுக்குப் பிறகும் தொடர... அதிகாலை 5 மணிக்கு எஸ்.பி. விஜயேந்திர பிதாரி அதிரடியாக அவர்களை அரெஸ்ட் செய்தார். அடுத்த நான்கு மணி நேரம்தான் இடைவெளி இருந்தது. அதற்குள் தகவல்கள் வாட்ஸ் அப்பில், ஃபேஸ்புக்கில் ஷேர் ஆக... 17-ம் தேதி மெரினா கடற்கரையில் குவிந்தனர் இளைஞர்கள். அந்த நாள் இரவிலும் போராட்டம் தொடர... அது 18-ம் தேதி தமிழகம் முழுவதும் தகிக்க ஆரம்பித்தது.

‘‘ஜல்லிக்கட்டு வேண்டும், பீட்டாவை தடை செய், திறந்துவிடு... திறந்துவிடு... வாடிவாசலைத் திறந்துவிடு’’ என்ற முழக்கங்களோடு சென்னை கடற்கரை சாலை அதிர்ந்துக்கொண்டிருந்தது. அங்கு கூடிய அனைவரது மொபைல்களிலும், ’wedojallikattu’ என்ற வாட்ஸ் அப் குழு இருந்தது. அடுத்தடுத்து அந்த வாட்ஸ் அப் குழுக்களில் தகவல்களும், படங்களும் வைரலாகப் பரவ... அது மல்டிபிள் ஆகிகொண்டே போனது. அடுத்த சில மணி நேரங்களில் சாரை சாரையாக மெரினாவை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள் இளைஞர்கள். ‘‘நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டுகிறேன்’’ என சொன்ன விவேகானந்தர் நினைவு இல்லம் முன்புதான் திரண்டார்கள்.

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அறிக்கை வெளியிடவில்லை, தேதி குறிக்கவில்லை, போஸ்டர் அடிக்கவில்லை, அண்ணன் அழைக்கிறார் என்கிற ஆர்ப்பரிப்பு இல்லை. பிரியாணி - வாட்டர் பாட்டில் - ஆளுக்கு 500 ரூபாய் பணம்... இப்படி எதுவுமே இல்லாமல் யாரும் தலைமை தாங்காமல் திரண்ட இளைஞர், மாணவர்கள் கூட்டம் இதுவரை தமிழகம் பார்க்காத அதிசயம். ஐ.டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களால் கடற்கரை நிரம்பி வழிந்தது. தமிழகத்தின் உரிமைக்காகவும், கலாசாரத்தைக் காக்கவும் கைகோத்தனர். போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் வந்து விடக்கூடாது என்பதில் இளைஞர்கள் அக்கறை காட்டினார்கள். போக்குவரத்தை சரி செய்ய... துப்புறவுப் பணியை மேற்கொள்ள... உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்ய... தனித்தனியாக குழுக்கள் அமைத்து பக்காவாக நடந்த போராட்டம் அரசியல் கட்சிகளுக்கான பாடம்.

எந்தவிதத்திலும் அரசியல் கலந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியோடு இருந்தார்கள். அதனால்தான் மு.க.ஸ்டாலின், டி.ராஜேந்தர் ஆகியோர் ஆதரவு தெரிவிக்க வந்தபோது, ‘‘இதில் அரசியல் தலைவர்களுக்கு இடம் இல்லை’’ என திருப்பி அனுப்பினார்கள். மோடி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரையும் பீட்டாவையும் போராட்ட இளைஞர்கள் மென்று துப்பினார்கள்.

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!

17-ம் தேதி மாலை வித்தியாசமான ஒரு மெளனப் போராட்டத்தை இளைஞர்கள் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு, ‘ஓ.பி.எஸ் மோட் ஆன்’ (OPS MODE ON)’ என பெயர் வைத்திருந்தனர். அரை மணி நேரம் நடந்த இந்தப் போராட்டம் ரசனையோடு இருந்தது. இருள்சூழ தொடங்கியவுடன் ‘‘போராட்டத்தைக் கைவிட வேண்டும்’’ என காக்கிகள் வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை இளைஞர்கள். அதனால், கடற்கரை உட்புற சாலையில் இருந்த தெரு விளக்குகள்  அணைக்கப்பட, ‘‘பவர் (அதிகாரம்) இருப்பதால் பவரை (மின்சாரம்)  அணைக்கிறீங்களா... எங்க பவரை காட்டவா’’ என சொல்லி கையில் இருந்த செல்போன்களில் இருந்து டார்ச் வெளிச்சம் பாய்ச்ச... புது வெளிச்சத்தில் மிளிர்ந்தது மெரினா.  காக்கிகள் போட்ட கணக்கு பொய்த்துப் போனது. பணிந்தது போலீஸ். மீண்டும் எரிந்தன தெரு விளக்குகள்.

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் இருவரும் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. இரவானால் கூட்டம் கலைந்துவிடும் என ஆட்சியாளர்கள் போட்ட கணக்கு பலிக்கவில்லை. பகல்பொழுதில் திரண்ட கூட்டத்துக்கு நிகராக இரவிலும் கூடினர். இரவில் தங்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் உடன் அழைத்து வந்தனர். 17-ம் தேதியைவிட 18-ம் தேதி அதிகம் பேர் மெரினாவில் சங்கமித்ததால், கடற்கரை சாலை ஸ்தம்பித்தது. வஜ்ரா வாகனம், காக்கிகள் படை குவிக்கப்பட்டும் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை.

இளைஞர்களுக்குத் தண்ணீர், பழம், சாப்பாடு, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை போராட்டக்காரர்களே தங்கள் காசை போட்டு வாங்கினார்கள். தன்னார்வலர்கள் சிலர் வேன், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து கொடுத்தனர். நள்ளிரவில் அங்கே டீ, பிஸ்கட் விற்றுக்கொண்டிருந்த பெரியவரிடம் ரூபாயை நீட்டி, ‘‘டீ’’ என்றோம். ‘‘காசு வேண்டாம்... நான் டீ விக்கிறவன் கிடையாது. என் வீடு சந்தோம் பக்கத்துல இருக்கு.. வீட்டுல இருந்து டீ போட்டு எடுத்துவந்து கொடுக்கிறேன்... காலியான பிறகு மீண்டும் போய் கொண்டு வருவேன். இளைஞர்கள் போராட்டத்துல என்னாலான பங்கு சார்’’ என்றார் அந்தப் பெரியவர்.

50 MB-க்கு இருக்கிற பவர்கூட  50 MP-க்கு இல்லை!

அரசுக்கு எதிராக மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளர்களும் சீனாவின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் 1989-ம் ஆண்டு திரண்டார்கள். ஒன்றரை மாதம் நடந்த அந்தப் போராட்டம் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்தது. தியானன்மென் சதுக்கம் போலதான் ஆனது கடற்கரை அண்ணா சதுக்கம்.

கொடுஞ்செயல்கள், ஊழல்கள் காரணமாக எகிப்து அதிபர் ஹொஸ்னி முபாரக்குக்கு எதிராக சின்ன சின்ன உள்ளூர் போராட்டங்கள் நடந்து வந்தன. 2011 ஜனவரியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடு தழுவிய புரட்சி வெடித்ததற்குப் பின்னால் இருந்தது சமூக வலைதளங்கள். பிறகு முபாரக் பதவியை ராஜினாமா செய்தார். அதை ஞாபகப்படுத்தின ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம். முதல்வரை டெல்லிக்கு ஓட வைத்திருக்கின்றனர் இளைஞர்கள்!

போராட்ட களத்தைவிட்டு கிளம்பியபோது ஒரு இளைஞர் பிடித்திருந்த அட்டையில் இருந்த வாசகம் இது. ‘50 MBக்கு இருக்கிற பவர்கூட 50 MP-க்கு இல்லை!’

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி, ஆ.நந்தகுமார், ஜெ.அன்பரசன்

படங்கள்: பா.காளிமுத்து, ப.சரவணகுமார், தே.அசோக்குமார், கோகுல்