Published:Updated:

'17 வருஷம் வேலை; ரூ.3,200 சம்பளம்'- மனக்குமுறலில் துப்புரவுப் பணியாளர்கள்

``பணக்காரங்க கை, கால் கழுவுவதற்கு வாங்கும் தண்ணீர் செலவுகூட எங்க சம்பளம் இல்லை'' என்று வேதனையுடன் துப்புரவுப் பணியாளர்கள் கூறினர்.

'17 வருஷம் வேலை; ரூ.3,200 சம்பளம்'- மனக்குமுறலில் துப்புரவுப் பணியாளர்கள்

ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தண்ணீர் டேங்க் ஆப்ரேட்டர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வும், குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி சம்பளம் வழங்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய துப்புரவுப் பணியாளர் தாஸ், ``நான் பனமரத்துப்பட்டி பஞ்சாயத்துல துப்புரவுப் பணியாளராக 12 வருடம் வேலை பார்க்கிறேன். எனக்கு மாதம் வெறும் 3,400 சம்பளம் தராங்க. அதிலும் 200 ரூபாய் பி.எஃப்., பணமுன்னு பிடித்துக்கொள்கிறார்கள். அதற்கு எந்த ரசீதும் கொடுப்பதில்லை. இன்னைக்கு விற்கிற விலைவாசியில் மாதம் 3,200 ரூபாய் சம்பளத்தை வைத்து எப்படி வாழ முடியும்.

என் மனைவியும் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருக்காங்க. எங்களுக்கு 3 பெண் பிள்ளைகள். ஒரு பையன் இருக்கிறாங்க. இந்தச் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும். வயிற்றுக் கொடுமைக்கு இந்த வேலையை செய்துகொண்டிருக்கிறோம். அரசு கருணையோடு எங்களுக்குச் சம்பளம் உயர்த்தி தர வேண்டும்'' என்றார்.

'17 வருஷம் வேலை; ரூ.3,200 சம்பளம்'- மனக்குமுறலில் துப்புரவுப் பணியாளர்கள்

துப்புரவுப் பணியாளர் ஆராயி, ``நான் 17 வருஷமா துப்புரவு வேலை பார்க்கிறேன். எனக்கு 3,200 ரூபாய் கொடுக்கிறாங்க. அதிலும் 200 ரூபாய் பிடிச்சுக்கிறாங்க. இந்த கையால் சாக்கடையும் மலத்தையும் அள்ளிப் போடுகிறோம். பணக்காறங்க கை, கால் கழுவுவதற்கு மாசம் வாங்கும் தண்ணீர் செலவுக்கூட எங்களுக்கு சம்பளம் இல்லை. நான் வீடு, வாசல் இல்லாமல் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறேன். கடந்த 10 வருடமாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட ஒரு சென்ட் நிலம் கேட்டால்கூட கொடுக்க மாட்டங்கறாங்க'' என்றார்.

தண்ணீர் டேங்க் ஆப்ரேட்டர் கந்தன், ``நான் சங்ககிரி பஞ்சாயத்தில் இருந்து வந்திருக்கிறேன். எங்களுக்கு மாதம் 2,300 சம்பளம் தராங்க. ஒரு தண்ணீர் டேங்க் தான் பார்க்க வேண்டும். ஆனால், நாங்க நாலு, அஞ்சு டேங்க் பார்க்கிறோம். எங்களுக்கு லீவும் கிடையாது நேரமும் கிடையாது. எங்களுக்கு அரசாங்கம் சம்பளத்தைக் கருணை கூர்ந்து உயர்த்தி தர வேண்டும்'' என்றார்.