Published:Updated:

மதுரை மாநகராட்சி பட்ஜெட்:'அம்மா' திட்டம் உதயம்

மதுரை: 'அழகிய மதுரை மாநகரத் திட்டம்' என்ற பெயரில் மதுரையை அழகாக்கும் 'அம்மா' திட்டத்திற்கு 2 கோடி ஒதுக்கப்படுவதாக மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னையைப் போல மதுரையிலும் 'அம்மா' என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

மதுரை மாநகராட்சி பட்ஜெட்:'அம்மா' திட்டம் உதயம்

அதற்குப் பதிலாக இன்னொரு 'அம்மா' திட்டத்தை அறிவித்தார் மேயர் ராஜன் செல்லப்பா. 'அழகிய மதுரை மாநகரத் திட்டம்' என்ற பெயரில் மதுரையை அழகாக்கும் 'அம்மா' திட்டத்திற்கு 2 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மற்றபடி வழக்கம் போல இந்த ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட் தான்.

##~~##
கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எல்.ராஜ் (தி.மு.க.), "பட்ஜெட் அறிக்கை நகலை ஏன் முன்கூட்டியே கொடுக்காமல், கூட்டம் தொடங்கிய பிறகு தருகிறீர்கள். இவ்வளவு பெரி புத்தகத்தைப் படிக்க நேரம் வேண்டாமா? பிறகு எப்படி நாங்கள் எங்கள் கருத்துக்களைச் சொல்ல முடியும்?" என்று கேள்வி கேட்டார்.
அமைதியாக இருக்காவிட்டால் அவையில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று மேயர் சொன்னதால், மேயரைக் கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் 13 பேரும் வெளிநடப்பு செய்தார்கள்.
இதேபோல் திருச்சி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-கே.கே.மகேஷ்