Published:Updated:

“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

‘காசு அடிக்கிற லஞ்சம் கொடுக்கிற பாவி
கட்சி மாறுது ஊரெங்கும் நாறுது ஏமாளி
தேர்தல் நெருங்குது விரக்தி கொடுக்குது கோமாளி
உங்கிட்ட உதவி கேட்டேனா...
உன்னோட பதவி கேட்டேனா..?’

“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

போயஸ் கார்டன் வீதிகளில் இரவில் சென்று, போலீஸார் வேடிக்கைப் பார்க்கும்போதே ‘என் ஓட்டு உங்களுக்கு இல்லை’ என சசிகலாவுக்கு எதிராக இப்படிப் பாடல் பாடி, போலீஸ் குறுக்கிட்டபோது சங்கு ஊதி, பாடலை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்ய எவ்வளவு தில் வேண்டும்! அது சோஃபியா அஷ்ரஃப்புக்கு இருக்கிறது. புறவாசல் வழியாக முதல்வர் நாற்காலியில் அமர சசிகலா முயற்சி செய்வது குறித்து தன் இசையால் கேள்வி எழுப்பி இருக்கிறார் சோஃபியா. சில மணி நேரத்தில் உலகம் முழுக்க தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகி இருக்கிறது இந்தப்பாடல். கொடைக்கானலில் பாதரசக் கழிவுகளைக் கொட்டியதற்கு எதிரான சோஃபியாவின் பாடல் ஏற்கெனவே தமிழகம் தாண்டியும் பிரபலம். அவருடைய குழுவைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

“பாடலை ஒரு போராட்ட வடிவமாக மாற்றி, நீங்கள் கேட்பது என்ன?’’

“எங்களுக்கு நீதி வேண்டும். இது சோஃபியா என்னும் ஒற்றைப் பெண்ணின் தேவை இல்லை. எங்கள் தலைமுறையின் தேவை. எங்கும் எதிலும் அநீதி மட்டுமே படர்ந்திருக்கிறது. முன்பு, மேஜையின் மீது தூசு படர்ந்திருந்தது; மெதுவாகத் தட்டினால் சுத்தமாகிவிடும். இப்போது மேஜைகளே தூசிகளால் செய்யப்பட்டு உள்ளன; தும்மித் தும்மி நுரையீரல் வலிக்கிறது. அந்த வலி தாங்காமல்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்... நீதி கேட்கிறோம். எல்லோருக்கும்போல், என் ஆன்மாவும் ‘நேர்மையின் பக்கம் நில்’, ‘நியாயத்தின் பக்கம் நில்’, ‘தீமைக்கு எதிராக நில்’ என்றது. முன்பு, கொடைக்கானல் சம்பவம் மிகவும் பாதித்தது... இப்போது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகி தமிழகத்தில் அரங்கேறும் அரசியல் சம்பவங்கள் என்னை மிகவும் பாதிக்கச் செய்தன. அதனால், போயஸ் கார்டன் வீதியில் இசைக் குழுவுடன் இறங்கினேன்.”

“போயஸ் வீதியில் இறங்கிக் கேள்வி கேட்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?”

“போயஸ் வீதியும் நம் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது? உண்மையில், அன்றிரவு நாங்கள் கிளம்பியது ஓர் ஆற்றாமையில். ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்கள் நாங்கள். ஆனால், இன்று அந்த ஜனநாயகம் கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இது பேரபாயம். யாருக்கும் நன்மை பயக்காது. அந்த விரக்தியிலும், ஆற்றாமையிலும்தான், பாடல் மூலமாகச் சில கேள்விகளை எழுப்பினோம். சசிகலா முதல்வராக பொறுப்பேற்கட்டும். அதில், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், புறவாசல் வழியாக இல்லாமல், முறையாக மக்களைச் சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதன்பின் பொறுப்பேற்கட்டும். அதுதான் ஜனநாயகமும்கூட. அவர், தன் சொந்த நலனுக்காக ஜனநாயகத்தைக் கொல்ல வேண்டாம். அந்தப் பாடல் சசிகலா என்னும் ஒற்றைப் பெண்ணுக்கு எதிராக எழுதப்பட்ட பாடல் இல்லை. அது, இப்போது நிலவும் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் புனையப்பட்ட பாடல்.”

‘‘உங்களுக்கு மிரட்டல் ஏதும் வந்ததா?’’

(சிரிக்கிறார்...) “இதுவரை இல்லை. சமூக ஊடகங்களில் ஆதரவு குவிகிறது.’’

“என் ஓட்டு உங்களுக்கில்லை!” - போயஸ் ஏரியாவில் சங்கு ஊதிய தில் டீம்

“இந்தத் தலைமுறை, சமூக ஊடகங்களில் மட்டும்தான் இருக்கிறது. எல்லாவற்றிலும் பிழை காண்கிறது. ஆனால், பொறுப்புகளை எடுத்துக்கொள்ள மறுக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுக்குத் தெளிவான பார்வையோ, அரசியல் புரிதலோ இல்லை. இவை உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். இதனை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“எங்களை அரசியலற்றவர்களாக மாற்றியது யார்? ‘அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்காதே. அரசு சொல்வதைக் கேள். அரசுக்குக் கீழ்படி. போராடாதே’ என்பதை, இந்தச் சமூகம் எங்கள் மீது திணித்தது. அந்தக் கருத்தியல் மீதுதான் எங்கள் கல்விமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு எங்களை அரசியலற்றவர்களாக ஆக்கிவிட்டு, இன்று ‘எங்களுக்குக் கோபம் மட்டும்தான் இருக்கிறது, தெளிவான பார்வை இல்லை’ என்பது என்ன நியாயம்? இப்போதுதான் நாங்கள் அரசியல் கற்கத் தொடங்கி இருக்கிறோம். வீதிக்கு வரத் தொடங்கி இருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் வரத் தொடங்கி இருக்கிறது. விரைவில் மிகப் பெரிய மாறுதல் வரும்.”

“ஒருவேளை சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்றால், அவர் என்ன செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?”


“நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.”

“நீங்கள் சொல்வது புரியவில்லையே?”

“ஆம். அவர் முதல்வர் ஆன பின்னர், ஓர் ஆண்டு கழித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ‘உங்களைப் பற்றி ஒரு ராப் பாடலை வெளியிட்டது நாங்கள்தான். உங்களைப் பிழையாக எண்ணிவிட்டோம்’ என்று மன்னிப்பு கேட்கவேண்டும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக ஆட்சிசெய்து, எங்களையும் வென்றெடுக்க வேண்டும். குறிப்பாக, எங்களுடன் உரையாட வேண்டும். எங்களுடன் என்றால், எங்கள் தலைமுறையுடன் உரையாட வேண்டும். உரையாடல் மூலமாக நிச்சயமாக மாற்றங்கள் நிகழும். இதற்கான அழுத்தங்களை எங்கள் இசையின் மூலம் தொடர்ந்து கொடுப்போம். எம் இளைஞர்கள் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கொடுப்பார்கள்.”

- மு.நியாஸ் அகமது