Published:Updated:

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!
பிரீமியம் ஸ்டோரி
மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

கொந்தளிப்பில் புதுக்கோட்டை

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

கொந்தளிப்பில் புதுக்கோட்டை

Published:Updated:
மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!
பிரீமியம் ஸ்டோரி
மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

ல்லிக்கட்டுப் போராட்டம், அ.தி.மு.க-வுக்குள் நடந்த அதிகாரப் போட்டியால் அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு என தமிழக மக்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியிருந்த வேளையில், மீத்தேன் திட்டத்தின் பெயரை மாற்றி டெல்டா பகுதியை அழிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 மக்களின் கடும் எதிர்ப்பாலும் தொடர் போராட்டங்களாலும் டெல்டா பகுதியில் மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்திருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிராக, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.   

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

இந்தச் சூழலில், நெடுவாசல் கிராமத்துக்குச் சென்றோம். தஞ்சை - புதுக்கோட்டை எல்லைப் பகுதியில் நெடுவாசல் உள்ளது; காவிரி, கொள்ளிடம் பாய்ந்தோடும் பகுதி. வறட்சி மாவட்டமான புதுக்கோட்டையில் இந்தப் பகுதிதான் பசுமையானது. நீர்வளமும், நிலவளமும் கொண்ட பகுதி என்பதால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைகின்றன. வீட்டுக்கு வீடு பலா மரங்கள் உள்ளன. மலைப்பகுதிகளில் விளையக்கூடிய மிளகுகூட இங்கு விளைவது ஆச்சர்யம்.
 “பொன்விளையும் இந்த பூமியை அழிக்கப் பாக்குறாங்களா?’’ என்று நம்மைப் பார்த்து கொதிப்புடன் கேட்டார் ஒரு பெரியவர்.

 “மூணு வருஷத்துக்கு முன்னால, தாசில்தாரும் மற்ற அதிகாரிகளும் இங்கே வந்து நிலங்களை அளந்து கல்லு போட்டாங்க. ‘இங்கே பெட்ரோல் இருக்குது. அதனால, இந்த இடத்தை எல்லாம் எடுத்துகிட்டு, நஷ்டஈடு கொடுப்போம்’னு சொன்னாங்க. அதுக்கு நாங்க, ‘இந்த நிலங்களை நம்பித்தான் நாங்க வாழுறோம். நிலத்தை வெச்சு 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி, போர் போட்டு விவசாயம் பண்ணுறோம். திடீர்னு நீங்க வந்து நிலத்தை எடுக்கப் போகிறோம்னு சொன்னா எப்டி’னு கேட்டேன். நான் எதிர்ப்பு தெரிவிச்சதால, என்னோட நிலத்தை விட்டுட்டு, சுத்தி இருக்குற 18 ஏக்கர் நிலத்தை வாங்கினாங்க. என்னோட நிலத்தை வாங்குறதுக்கு பல வழிகள்ல முயற்சி செஞ்சாங்க. ‘இந்த நிலம் இல்லைன்னா குடும்பத்தோட தற்கொலை செய்யிறதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்லை’னு சொன்னேன். அதோட போயிட்டாங்க. இப்போ திடீர்னு திரும்பவும் அறிவிச்சிருக்காங்க” என்றார், நெடுவாசலைச் சேர்ந்த சுப்பிரமணியம். 
பன்னீர்செல்வம் என்பவர், “அதிகாரிங்க வந்து ‘உங்க ஊர்ல மட்டுமில்ல... திருவரங்குளம், கறம்பக்குடி, கருங்காக்குறிச்சி, வாணக்கன்காடு, புள்ளான்விடுதி, வடகாடு என பல ஊர்கள்ல நிலம் எடுக்கிறோம். ஆயில்தான் எடுக்கப்போறோம்’னு சொன்னாங்க. அதை நம்பி கையெழுத்துப் போட்டோம். இது எங்க குடியைக் கெடுக்கிற திட்டம்னு அப்புறம்தான் தெரிஞ்சது. இந்தத் திட்டம் வந்துச்சுன்னா, நாங்க ஒரு லட்சம் பேரும் அகதிகளாகப் போக வேண்டியதுதான்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபதி, “இது மீத்தேன் திட்டம்தான். பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேன், ஈத்தேன் உள்ளடக்கிய வாயுதான். நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில், புதுக்கோட்டையில் மட்டும் 13 இடங்கள். இந்தப் பகுதி மக்களின் கருத்தைக் கேட்காமல், இந்தத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆறாயிரம் அடி ஆழத்துக்கு போர் போட்டு, நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டு, அதன்கீழே இருக்கும் பாறையில் வெடிவைத்து துளைபோட்டு, இயற்கை வாயு எடுக்க உள்ளார்கள். கார்பனை, குழாய் வைத்து எரியவிடுவார்கள், அதனால், இந்த மாவட்டத்தின் மண்வளம், நிலத்தடி நீர்மட்டம், வேளாண்மை, சுற்றுச்சூழல் என எல்லாமே கடுமையாகப் பாதிக்கப்படும். பெங்களூருவைச் சேர்ந்த ஜெம் லேபாரட்டரீஸ் என்ற நிறுவனம், இதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இது, கர்நாடகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி-யின் முன்னாள் எம்.பி ஒருவரின் குடும்பத்துக்குச் சொந்தமானதாம். இந்தத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், மீத்தேனுக்கு எதிராக நடந்த போராட்டத்தைப்போல புதுக்கோட்டையிலும் போராட்டம் நடக்கும்” என்று எச்சரித்தார்.

மீத்தேன்... ஹைட்ரோ கார்பன் முகமூடி அணிந்து வருகிறது!

இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று புதுக்கோட்டை மன்னர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். நெடுவாசலுக்கு ஆய்வுசெய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளை, கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இந்த மக்களின் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நெடுவாசலைத் தாண்டி பல இடங்களில் போராட்டம் தொடங்கி உள்ளது. காரைக்காலில் செயல்படுத்த உள்ள இந்தத் திட்டத்தை எதிர்ப்போம் என புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

 இந்தத் திட்டத்தை எதிர்க்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்பதற்காக, காவல்நிலையம் சென்ற புவியியல் ஆய்வாளர் மணிகண்டன் உட்பட நான்கு பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைதுசெய்தனர். இது, அங்கு கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: ம.அரவிந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism