Published:Updated:

“விதேசி குளிர்பானங்களை விரட்டியடிப்போம்!” - வரிந்துகட்டும் வணிகர்கள்

“விதேசி குளிர்பானங்களை விரட்டியடிப்போம்!” - வரிந்துகட்டும்  வணிகர்கள்
பிரீமியம் ஸ்டோரி

ல்லிக்கட்டுப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானவை, வெளிநாட்டுக் குளிர்பானங்கள்தான். இந்த உணர்வை மதித்து, ‘மார்ச் 1 முதல் பன்னாட்டுக் குளிர்பானங்களை விற்கமாட்டோம்’ என அறிவித்துள்ளது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு. இதன் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.

“விதேசி குளிர்பானங்களை விரட்டியடிப்போம்!” - வரிந்துகட்டும்  வணிகர்கள்

‘‘சுதேசி பானங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என எங்களின் ஒவ்வொரு மாநாட்டிலும் வலியுறுத்தி வருகிறோம். அதன்படியே இந்த முடிவு. இதனால், வியாபாரிகளுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இருந்தாலும் பரவாயில்லை. அறம் சார்ந்த தொழில்தான் இந்தச் சமூகத்துக்குத் தேவை என்பதை உணர்ந்து, அனைத்து வணிகர்களும் உற்சாகமாக இந்தப் பயணத்தில் பங்கெடுத்துள்ளனர். ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள் போன்ற சிலவற்றுடன், பன்னாட்டுக் குளிர்பான கம்பெனிகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. எனவே, இவற்றின் விற்பனையை நிறுத்த வணிகர்களில் சிலர், கால அவகாசம் கேட்டுள்ளனர். மற்றபடி, 15 லட்சம் வணிகர்களின் கடைகளில் மார்ச் 1-ம் தேதி முதல் பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்கப்பட மாட்டாது.

பன்னாட்டு பானங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தபிறகு, உள்நாட்டுக் குளிர்பானங்களின் தயாரிப்பு முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இவை உள்ளூர் தொழில் வணிகத்தை முற்றிலும் அழிக்கின்றன. மேலும், நமது தேசத்தின் பொருளாதாரத்தையும் சுரண்டி வருகின்றன. எனவேதான், ‘வெளிநாட்டுக் குளிர்பானங்களைப் புறக்கணிப்போம்’ என்று முடிவெடுத்து, பிப்ரவரி மாதம் முழுவதும் பொதுமக்களிடம் அதன் தீமைகளை விளக்கி விழிப்பு உணர்வு பிரசாரங்களைச் செய்தோம்’’ என்றார் விக்கிரமராஜா. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“விதேசி குளிர்பானங்களை விரட்டியடிப்போம்!” - வரிந்துகட்டும்  வணிகர்கள்

‘‘குளிர்பானங்களைப்போல மற்ற பன்னாட்டுப் பொருள்களுக்கும் தடை விதிக்கப்படுமா?’’ என்று அவரிடம் கேட்டோம். ‘‘இப்போது நம்முடைய முதல் இலக்கு, உடலுக்குத் தீமையை விளைவிக்கும் இந்தக் குளிர்பானங்கள். மற்ற விஷயங்களைப் பிறகு பார்க்கலாம். நாம் பயன்படுத்துவதில், 75 சதவிகிதப் பொருட்கள் பன்னாட்டுத் தயாரிப்புகள்தான். அடுத்தடுத்து இலக்குகளை வைத்து, அவற்றையும் விரட்டியடிப்போம். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம். உள்நாட்டுக் குளிர்பானங்களை ஆதரிப்போம். உடலுக்கு இதமான மோர், இளநீர், பதநீர், நுங்கு போன்ற பானங்களை அருந்துவோம். பன்னாட்டுக் குளிர்பானங்களை விரட்டியடிக்கும் இந்தப் புனித போராட்டம் வெற்றிபெறும்’’ என்றார்.
 
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism