Published:Updated:

இலங்கை படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் இன்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் 5 விசைபடகுகளுடன்  இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டனர். இன்று காலை ஊர்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இனி எல்லை தாண்டி வரக்கூடாது என்ற எச்சரிக்கையுடன்  34 மீன்வர்களையும் ஊர்காவல்துறை நீதிபதி விடுதலை செய்து உத்ரவிட்டார்.

இதையடுத்து மீனவர்கள் இலங்கையில் உள்ள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இரண்டு நாட்களில் இவர்கள் ராமேஸ்வரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

##~~##
கடந்த புதன்கிழமையன்று 19 பேரும், நேற்று 34 பேரும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதாவும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்  சிங்கிற்கு டெல்லியில் உள்ள இலங்கை துணைத் தூதரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து, மீனவர்களை விடுவிக்க அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது,

- இரா.மோகன்